இக
108 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
இக்கிடை, இவளுக்கு ஒரு
படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறதுகாணும். என கள்வி - தன் மனத்தில் ஒடுகிறது பிறர்
அறியாத படி மறைத்துப் பரிமாறக்கூடிய இவள் படும் பாடே இது! தான் பட்ட - 1‘கருமை
பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’
என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே - பகலை இரவு ஆக்கியும்,
‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.
அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?
(7)
151
வஞ்சனே! என்னும்;
கைதொழும்; தன
நெஞ்சம்வேவ நெடிதுஉயிர்க்
கும்;விறற்
கஞ்சனைவஞ்சனை செய்தீர்!
உம்மைத்
தஞ்சம் என்றுஇவள்
பட்டனவே!
பொ - ரை :
‘வலிமையினையுடைய கம்ஸனை அவன் நினைத்த நினைவு அவனோடே போமாறு கொன்றவரே! இவள், ‘குணங்களாலும்
செயல்களாலும் என்னை வஞ்சித்தவனே!’ என்கிறாள்; கைகூப்பி வணங்குகிறாள்; தன்னுடைய நெஞ்சமானது
வேகும்படி பெருமூச்சு எறிகின்றாள்; ஆதலால், உம்மையே பற்றுக்கோடாக நினைத்து இவள் பட்ட துன்பங்கள்
எண்ணில் அடங்கா’ என்றவாறு.
வி-கு :
தன நெஞ்சம்; ஒருமை பன்மை மயக்கம். வஞ்சனை செய்தீர் - பெயர். தஞ்சம் - பற்றக்கோடு. பட்டன
-பெயர். ‘ஏ’காரம் இரக்கத்தின் கண் வந்தது.
ஈடு :
எட்டாம் பாட்டு.
‘உம்மை அனுபவித்துச் சுகித்திருக்க வைத்தீர் அல்லீர்; கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்;
உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.
_____________________________________________________________
1.
ஸ்ரீராமா. சுந். 66 : 10.
2. பகலை இரவாக்கியது,
வில்லி பாரதம் பதினாலாம் போர்ச்சருக்கம் செய். 164 - 173
முடியக்காண்க. ஆயுதம் எடுத்தது,
க்ஷ மூன்றாம் போர்ச்சருக்கம், செய். 14-20 முடியக்
காண்க. அளவுபடை - சிறுபடை; இங்கு, நாயகன்.
பெரும்படை - நாயகி. கண்ணழகு
முதலியவற்றையுடையவளாதலின், நாயகியைப் ‘பெரும்படை’ என்றார்.
|