| வஞ 
  
    | 
நான்காந்திருவாய்மொழி - பா. 8 | 
    109 |  
    வஞ்சனே என்னும் 
- தாயார், ‘வஞ்சித்தான்’ என்னப் பொறுத்திலள்; 1தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை 
வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து’, ‘நான் அல்லேன் என்றாலும் தவிர ஒண்ணாதபடி 
என்னையும் அறியாதே வஞ்சித்து, உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே!’ என்கிறாள். கைதொழும் 
- வஞ்சித்த உபகாரத்துக்குத் தோற்றுக் கைதொழும். தன நெஞ்சும் வேவ நெடிது உயிர்க்கும் - தாயார் 
சொன்ன குணமின்மைக்கு ஒரு பரிகாரம் செய்தும் ஆற்றாமை போகாமல் தன் நெஞ்சும் வேவ நெடுமூச்சு 
எறியாநிற்கும். 2‘பின் அழுக்குப் புடைவையை உடுத்தவளும் அரக்கியரால் சூழப்பட்டவளும் 
பட்டினியால் இளைத்தவளும் எளியவளும் அடிக்கடி பெருமூச்சு எறிகின்றவளுமான பிராட்டி’ என்கிறார். 
ஸ்ரீவால்மீகியும். 3‘உள்ளம் மலங்க’ என்ற இடம், வெட்டி விழுந்த படி சொல்லிற்று.
4‘உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்ற இடம், உலர்ந்தபடி சொல்லிற்று; இங்கு, 
‘தன நெஞ்சம் வேவ’ என்கையாலே, நெருப்புப் பற்றி எரிகிறபடி சொல்லுகிறது. 
    விறல் கஞ்சனை 
வஞ்சனை செய்தீர் - ‘மிடுக்கனான கம்ஸனை அழியச் செய்தீர். உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை 
நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர். 5அடைந்தவர்கள் பகைவர்கள் என்னும் வேற்றுமை 
இன்றி உமக்கு இரண்டு இடத்திலும் காரியம் ஒன்றேயோ?’ என்கிறாள். உம்மைத் தஞ்சம் என்ற -
6தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய்’ என்னும் சர்வ ரக்ஷகனைக் காதுகரைச் சொல்லுமாறு 
போன்று சொல்லுகிறாள். மகள் நிலையைப் பார்த்து. 7தஞ்சம் அல்லாதாரைத் ‘தஞ்சம்’ 
என்று இருந்தால் சொல்லுமாறு 
_____________________________________________________________ 
1. 
திருவாய். 1. 7 : 7 
2. ஸ்ரீராமா. சுந். 15 : 18. இந்தச் சுலோகம், பலகாலும் 
பெருமூச்சு விடுதற்கு மேற்கோள். 
3. திருவாய். 2. 4 : 4 
4. திருவாய் 2. 4 : 7 
5. ‘அடைந்தவர்களான யசோதை 
முதலியவர்கட்குத் தோற்கையும், அடைந்தவரல்லாதவரானகம்ஸன் முதலியோரே வெல்லுதலும் அன்றோ 
உமக்கு ஸ்வபாவம்? இப்போது
 இரண்டிடத்திலும் தோற்பிக்கையேயாய் விட்டதே!’ என்றபடி.
 
6. 
திருவாய். 3. 6 : 9 
7. 
வியாக்யாதாவின் ஈடுபாடு.  |