க
முதல் திருவாய்மொழி - பா. 3 |
11 |
காமுற்ற கை அறவோடு
- ஆசைப்பட்ட பொருள் இழவோடே; ‘ஆசைப்பட்ட பொருள் கையில் கிடையாமையாலே வந்த இழவோட’
என்றபடி. கைத்து-பொருள். காமுறுகையும் இழவும் கடலுக்கு இல்லாதிருக்கவும் எடுத்துக்காட்டாய்
விளங்குகிற தனக்கு உண்டு ஆகையாலே ‘இதற்கும் உண்டு’ என்று 1அநுமித்துச்
சொல்லுகிறாள். எல்லே - இரவோடு பகலோடு வேற்றுமை அறக் கதறுகிறபடியைக் கண்டு, 2ஓதமும்
நானும், உறங்காது இருந்தேனே’ என்கிறபடியே, தன் படிக்குப் போலியாய்’ இருக்கையாலே 3சிதையறவு
போன்று 4தோழியை விளிக்குமாறு போன்று விளிக்கிறாள். இனி, ‘எல்லே’ என்பதனை
வியப்பு இடைச் சொல்லாகக் கோடலும் அமையும். 5‘என்னே!’ என்பது பொருள்.
‘இராப்பகல் முற்ற நீ கண்துயிலாய் - உறங்கக் கண்ட இரவுக்கும், உறங்காமைக்கும் கண்ட
பகலுக்கும் உன் பக்கல் ஒரு வேற்றுமை கண்டோம் இல்லை. உன் காம்பீர்யமெல்லாம் எங்கே
போயிற்று?’ என்பாள், ‘நீ’ என்கிறாள். நெஞ்சு உருகி ஏங்குதியால் - நெஞ்சு அழிந்து கூப்பிடுகின்றாய்.
‘உறக்கம் இன்றியே ஒழியினும் நெஞ்சாயினும் அழியாதிருக்கப் பெற்றனையோ? அதுவும் இன்றே!’ என்பாள்,
‘உருகு ஏங்குதியால்’ என்கிறாள்.
தென்னிலங்கை
முற்றத் தீ ஊட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ - பரம காதலனான சக்கரவர்த்தி திருமகன்
திருவடிகளை ஆசைப்பட்ட நான் பட்டது பட்டாயாகாதே நீயும்?6 ‘பாவியேன், பரத்துவத்திலே
ஆசைப்பட்டாய் இல்லையே காதலியின் விரஹம் பொறுக்கமாட்டாத சக்கரவர்த்தி திரு
_____________________________________________________________
1.
அநுமித்தல் - அநுமானப் பிரமாணத்தால் அறிதல். அநுமானம் - கருதலளவை
2. பெரிய திருமொழி.
9. 4 : 9
3. சிறைக்கூடத்தில் யாதானும்
ஒரு காரணத்தால் சேரத் தங்கியிருக்க நேரின், அப்பொழுது
அங்கே உண்டாகும் உறவு.
4. ‘எல்லே இளங்கிளியே’
என்ற திருப்பாவையை நோக்குக.
5. ‘புல்லிப் புணர்முலையின்
பூங்குவட்டின் மேலுறைந்தாய்
எல்லே
மற்றெம்பெருமாற்கு இன்றிவளு மின்னாளோ?’
(சிந். 2957) என்ற
இடத்து ‘என்னே’ என்னும் பொருளதாதல் காண்க.
6. ‘பாவியேன்’ என்பது,
‘ஐயோ!’ என்னும் பொருளது. ‘பரத்துவத்தில் ஆசைப்பட்டால்
காதலியின் விரகநோயின் க்ஷமைக்குப்
பிரசங்கமில்லாமையாலே விளம்பம் பொறுக்கலாம்,’
என்பது கருத்து.
|