New Page 1
110 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
போன்று சொல்லுவதே!
இவள் பட்டனவே - 1‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்;
நித்திய சூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்; 2‘இலங்கையை
அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும்
எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்; கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர்; என் வழி
வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும்? இனி, நீர் படுத்துவமவற்றைச்
சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள் எனலுமாம்.
(8)
152
பட்டபோதுஎழு போதுஅறி
யாள்;விரை
மட்டுஅலர் தண்துழாய்
என்னும்; சுடர்
வட்டவாய்நுதி நேமி
யீர்! நுமது
இட்டம் என்கொல்இவ்
ஏழைக்கே?
பொ - ரை :
‘பேரொளியினையும் வட்டமான வாயினையும் கூர்மையினையுமுடைய சக்கரத்தைத் தரித்தவரே! சூரியன்
மறைகின்ற காலத்தையும் தோன்றுகிற காலத்தையும் அறிகின்றிலள்; வாசனையோடு மலர்கின்ற தேனையுடைய
குளிர்ந்த திருத்துழாய் என்று சொல்லுகிறாள்; அரியாமையினையுடைய இப்பெண்ணின் திறத்து நுமது எண்ணம்
தான் யாதோ?’ என்றவாறு.
வி - கு :
அலர் துழாய் - வினைத்தொகை. நேமீயிர் - விளிப்பெயர். ஏழை - அறிவில்லாதவள். இது, உயர்திணை
இருபாற்கும் பொதுப் பெயர். ‘களி மடி மானி காமி கள்வன், பிணியன் ஏழை’ என்றார் நன்னூலார்.
_____________________________________________________________
1. இத்திருப்பாசுரத்தில்,
வஞ்சனையை உபகாராமாகச் சொல்லுகையாலே சம்சாரிகளில்
வேறுபாடு. ‘தன நெஞ்சம் வேவ’ என்கையாலே
நித்தியசூரிகளிலும், தாயான தன்னிலும்
வேறுபாடு. ‘கைதொழும்’ என்றதனை நோக்கி அருளிச்செய்கிறார்
‘எங்களைப் போன்று
இருக்கப் பெற்றிலள்’ என்று. ‘கஞ்சனை வஞ்சனை செய்தீர்’ என்றதனை நோக்கி
அருளிச்செய்கிறார் ‘கம்ஸனைப் போல முடித்தீரல்லீர்’ என்று. ‘என் வழி வாராதே’
என்றது, ‘என
தவளவண்ணர் தகவுகளே’ என்றும், ‘என கள்விதான் பட்ட வஞ்சனையே’
என்றும் தான் கூறிய வார்த்தைகளை
அநாதரித்தமை நோக்கி; ‘என் சிறகின்கீழ்
அடங்காப் பெண்ணைப் பெற்றேன், இரு நிலத்து ஒரு
பழிபடைத்தேன் ஏ பாவமே!’ (
திருநெடுந். 12.) என்றார் மங்கை மன்னனும்.
2. ஸ்ரீராமா. சுந். 9 :
30.
|