என
112 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
என்னும் வேற்றுமை இன்றி
அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ?’ என்கிறாள் என்றபடி. 1‘ஆழிப்படை அந்தணனை,
மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர்தம்முடைய வார்த்தையும்? கையும் திருவாயுமான
அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் 2இவர்கள். நுமது இட்டம் என் கொல் -
3இரா வணன் இரணியன் முதலியோர்களை முடித்தது போன்று, முடிக்க நினைக்கிறீரோ? நித்தியசூரிகளைப்
போன்று, கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பிக்கிறீரோ? தன்னையும் மறந்து உம்மையும் மறந்து
சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைக்கிறீரோ? இவள் பேற்றில் நீர் நினைத்திருக்கிறது
என்? இவ்வேழைக்கே - சிறிதும் மனத்திட்பம் இல்லாதவளான 4இவள் விஷயத்தில்
நீர் நினைத்திருக்கிறது என்?
(9)
153
ஏழைபேதை இராப்ப
கல்தன
கேழ்இல்ஒண் கண்ணநீர்கொண்
டாள்;கிளர்
வாழ்வை வேவஇலங்கைசெற்
றீர்! இவள்
மாழைநோக்குஒன்
றும்வாட் டேன்மினே.
பொ - ரை :
ஏழையாய்ப் பேதையாய் இருக்கின்ற இவள், தனது ஒப்பில்லாத ஒள்ளிய கண்களில் எக்காலத்திலும்
நீரைக் கொண்டாள்; மேன்மேலும் ஒங்குகிற செல்வமானது அழியும்படி இலங்கையை அழித்தவரே!
இவளுடைய இளமை பொருந்திய மான் போன்று நோக்கு ஒன்றும் வாடும்படி செய்யாதீர்.
_____________________________________________________________
அடைந்தவளான இவளைச் சேர்த்தி
அழகைக் காட்டி அழிக்கைக்கும் பரிகரம்
ஒன்றேயோ?’ என்றபடி. ‘உகப்பாரை அவ்வழகைக் காட்டி,
அவ்வழகைக்கொண்டு அகல
நின்று முடிக்கும்; உகவாதாரைக் கிட்டி நின்று, அத்திருவாழியாலே அழியச்
செய்து
முடிக்கும் என்பர் சீயர்’ என்பது இருபத்து நாலாயிரப்படி.
1. திருவாய்.
1. 7 : 1.
2. ‘இவர்கள்’ என்றது, திருமங்கைமன்னன்
முதலானாரையும் சேர்த்து அருளிச்செய்தபடி.
‘ஆழியொடும், பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார்
என்று அறியேன்’
என்பது, மங்கைமன்னன் திருவாக்கு.
3. இங்குக் கூறப்படுகின்றவை,
‘சுடர் வட்ட வாய் நுதி நேமீயிர்!’ என்ற விளியின்
தொனிப்பொருள்: ‘நுதி’ என்றதனை நோக்கி,
‘இராவணன் இரணியன் முதலியோரை
முடித்தது போன்று’ என்றும், ‘சுடர்’ என்றதனை நோக்கி, ‘நித்தியசூரிகளைப்
போன்று’
என்றும், அருளிச் செய்கிறார். ‘பட்டபோது எழுபோது அறியாள்’ என்றதனை நோக்கி,
‘தன்னையுமறந்து’ என்று தொடங்கும் வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.
4. ‘சிட்டனே!செழுநீர்த்
திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் சிந்தித்தாயே?’ என்பர்
பின்னும். (7. 2 : 4)
|