அ
நான்காந்திருவாய்மொழி - பா. 11 |
115 |
அடி சூட்டலாகும்’ என்க.
‘வாட்டம் இல் புகழ் வாமனன்’ என்பதனை, ‘தாவா விழுப்புகழ் மாயோன்’ (தொல். பொ. புறம்.) என்றதனோடு ஒப்பிடுக.
ஈடு :
முடிவில், ‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் இவர் பிரார்த்தித்தபடியே நித்தியசூரிகள்
திரளிலே போய்ப் புக்குச் சர்வேஸ்வரன் திருவடிகளிலே, 1‘சூட்டு நன்மாலை’ப்படியே
திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்’ என்கிறார்.
வாட்டம் இல்
புகழ் வாமனனை - ‘நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே
வந்து தோன்றினான்; இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது. இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே
பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள். தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன்
ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள். இசை கூட்டி - பரிமளத்தோடே பூ அலருமாறு போன்று,
இசையோடே புணர்புண்டவைகள். வண்சடகோபன் சொல் -2‘உதாரகுணத்தையுடையவரும்
மனனசீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் சுலோகங்களாலே
செய்தார்’ என்கிறபடியே, மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர்
ஆதலின், ‘வண்சடகோபர்’ என்கிறார்.
அமை பாட்டு ஓர்
ஆயிரத்து - அமைவு -சமைவாய், சொல்லும் பொருளும் நிறைந்திருத்தல். இப்பத்தால் அம் தாமம்
அடி சூட்டலாகும் - இப்பத்தையும் கற்க வல்வர்கட்குச் செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே
நித்திய கைங்கரியம் பண்ணப் பெறலாம். ‘ஆயின், நித்திய கைங்கரியத்தைச் செய்வதற்கு இவர்க்குப்
பிறந்த ஆற்றாமை இதனைக் கற்குமவர்கட்கும் உண்டாக வேண்டாவோ?’ எனின், வேண்டா; தொண்டினைச்
செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது பெறாமையாலே போலே காணும் இவ்வாற்றாமை எல்லாம் இவர்க்குப்
பிறந்தன; 3தமப்பன் செல்வம் புத்திரனுக்குக்கிடைக்கவேண்டியது முறையாமாறு போன்று,
இவ்
_____________________________________________________________
1. ‘சூட்டு நன்மாலைகள்
தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீர், ஆட்டி அம்தூபம்
தராநிற்க’ என்பது, திருவிருத். செ. 21.
2. ஸ்ரீராமா. பால. 2 :
42.
3. ஆழ்வாருடைய திருவாய்மொழியினைக்
கற்ற வழியாலே, ஆழ்வார்க்கு, இதனைக்
கற்பவர்கள் மாணாக்கர்கள் ஆதலாகிய புத்திர சம்பந்தத்தைப்
பெறுகின்றார்கள் ஆதலின்,
இங்ஙனம் அருளிச்செய்கிறார்.
|