ஈ
ஐந்தாந்திருவாய்மொழி - முன்னுரை |
119 |
ஈடு :
1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
வந்து கலந்தான் என்கிறார்.
அம் தாமத்து அன்பு
செய்து - 2அழகிய தாமத்திலே செய்யக் கூடிய சினேகத்தை என் பக்கலிலே செய்து. இனி,
இதனை ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று, இடவாகு பெயராகக் கொண்டு, ‘பரம்பதத்திலுள்ளார்
பகலிலே செய்யக்கூடிய சினேகத்தை என் பக்கலிலே செய்து’ என்று பொருள் கூறலுமாம். இதனால்,
3‘ஒரு விபூதியில் உள்ளார் பக்கலிலே செய்யக் கூடிய சினேகத்தை என் ஒருவன் பக்கலிலே
செய்தான்’ என்கிறார்; 4‘முற்றவும் நின்றனன்’ என்று, முன்னர்த் தாமே அருளிச்செய்தார்
அன்றோ? என் - அவன் மேல் விழத் தாம் 5இறாய்த்தமை தோன்றுகிறது. இவர், முன்
நிலையினை நினைந்து இறாய்நின்றார்; அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்றான். கமர் பிளந்து
இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. 6‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற
ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார். ‘விடாயர் மடுவிலே சேருமாறு
போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார். ‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம்
என்?’ என்னில், ‘அம்மான் ஆகையாலே’ என்கிறார் மேல்: அம்மானுக்கு - நித்திய விபூதியில் உள்ளாரைப்
போன்று 7லீலா விபூதியில் உள்ளார்க்கும் வந்து முகங்காட்ட வேண்டும் சம்பந்தத்தை
உடையவனுக்கு.
_____________________________________________________________
1.
திருவாய்.
2. 3 : 10.
‘ஆழிநூல் ஆரம் உள’ என்றதனை
நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நி வாஹத்திலே
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2.
ஈண்டு அழகாவது, விலக்ஷண போக்ய போக உபகரண போக ஸ்தானங்களாலே வந்த
அழகு.
3. ஒரு விபூதி -
பரமபதம்.
4.
திருவாய்.
1. 2 : 6
5.
இறாய்த்தமை - பின் வாங்கினமை.
6.
திருவாய்.
2. 4. 7.
7.
லீலா விபூதி - விளையாட்டுக்குரிய உலகம்.
‘உலகம் யாவையும் தாமுள
ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும்
நீங்கலா
அலகி லாவிளை யாட்டுஉடையார்அவர்”
என்றார் கம்பநாடர்.
|