முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

120

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

வகுத்த ஸ்வாமி ஆகையாலே ‘அம் தாமத்துஅன்பு செய்தான், என் ஆவிசேர்ந்தான்’ என்றபடி, 1இனி, இவரைப் பெற்ற பின்னரே அவன் சர்வேஸ்வரனானான் என்பார், ‘அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான்’ என்கிறார் எனலுமாம்.

    அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள - இதற்கு, 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்தியசூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச்செய்வர். ‘ஆயின், அவர்களை 2‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்?’ என்னில், ஞானவான்களாய் இருக்கச்செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக்கொள்கிறார்கள் இத்தனையே. இனி, இதற்கு எம்பெருமானார், இவரோடு கலப்பதற்கு முன்பு இறைவனைப் போன்றே இவையும் ஒளி இழந்தவையாய்ச் சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச்செய்வர். ‘ஆயின், இறைவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ?’ எனின், கற்பகத்தரு  வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ? அம் தாமம் வாழ் முடி - அழகிய மாலையானது முடியிலே சூடப்பட்டதனால் வாழத் தொடங்கிற்று. இனி, ‘வாண்முடி’ என்பது பாடமாயின், ‘எல்லை அற்ற ஒளி உருவமான முடி’ என்று பொருள் கூறுக. அம் தாமம்  சங்கு - ஒளி உருவமான திருஆழி. நூல் - திருப்பூணூல். ஆரம் - திரு ஆரம். உள - உள்ளவைகள் ஆயின. இவற்றைக் கூறியது நித்தியசூரிகட்கு உபலக்ஷணம். இனி, ‘நித்தியரான இவர்கள் 3உளராகையாவது என்?’ என்னில், 4‘அந்த ஸ்ரீமந்நாராயணன் தனியராக மகிழ்ச்சி அடைந்திலர்’ என்கிறபடியே,

_____________________________________________________________

1. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே, ‘அந்தாமம் வாழ்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள’
  என்பதற்கு, ‘இவைகள் உண்டு’ என்பது பொருள். அதாவது, ‘இவற்றோடே வந்து
  கலந்தான்’ என்பது கருத்து.

2. ‘சூடுந் தண்துழாய்’ என்றதன் உரையை நோக்குக (1. 8 : 1) பக். 215

  எம்பெருமானார் நிர்வாகத்திலே ‘உள’ என்பதற்குச் ‘சத்தை பெற்றன’ என்பது பொருள்.

3. உளராகையாவது, இப்போது  உளராகையாதல்.

4. மஹோபநிடதம்.