முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

186

122

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

 

156

 

        திருஉடம்பு வான்சுடர்; செந் தாமரைகண் கைகமலம்;

        திருஇடமே மார்வம்; அயன்இடமே கொப்பூழ்;

        ஒருவுஇடமும் எந்தை பெருமாற்கு அரனேஓ!

        ஒருவுஇடம் ஒன்றுஇன்றி என்னுள்கலந் தானுக்கே.

 

    பொ - ரை : வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தவனான எந்தை பெருமானுக்கு அழகிய திருமேனி சூரியனைப் போன்று இருக்கின்றது; திருக்கண்கள் செந்தாமரை போன்று இருக்கின்றன; திருமகளுக்கு இருப்பிடம் திருமார்பாகும்; பிரமனுடைய இடம் திரு உந்தித்தாமரையாகும்; ஒழிந்த மற்றை இடம் சிவன் இருக்கும் இடமாகும்.

 

    வி-கு : வான் சுடர் -சூரியன்; மிக்க ஒளியுமாம். ஒருவுதல்-நீக்குதல். ‘ஒன்று’ என்பது, ‘சிறிது’ என்னும் பொருட்டாய் நின்றது. ஓகாரம், சிறப்புப் பொருளில் வந்தது. கலந்தான் - வினையாலணையும் பெயர்.

 

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, ‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன்தான், என் உட்ம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்.

 

    திரு உடம்பு வான் சுடர் - அணைத்த போதை ஸ்பரிச சுகங் கொண்டு அருளிச்செய்கிறார். 2’ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர், ‘திரு உடம்பு வான் சுடர்’ என்னப்பெறுவதே! ‘ஈஸ்வரனுக்கு

_____________________________________________________________

1. ‘என்னாவிசேரம்மானுக்குச்செம்பொன் திருஉடம்பு’ என்றதிலே நோக்காகத் ‘தம்மோடே’
  என்றும், ‘அயனிடமே கொப்பூழ், ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ’
  என்றதிலே நோக்காகத் ‘தன்னுடம்பை ‘ என்றும், ‘ஒருவிடமொன்றின்றி என்னுள்
  கலந்தானுக்கே’ என்றதிலே நோக்காக ‘என்னுடம்பை’ என்றும் தொடங்கி அருளிச்
  செய்கிறார்.

 

2. பலகாலும் விக்கிரத்தை வருணிக்கிறபடியை அனுசந்தித்து நம்பிள்ளை ஈடுபடுகிறார்.
  ‘ஈஸ்வரனுக்கு’ என்று தொடங்கும் வாக்கியத்தால், ஆப்த தமர். நம்பத் தகுந்தவர்களில்
  உயர்ந்தவர்.