வ
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 2 |
123 |
விக்ரஹம் இல்லை, குணம்
இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க
இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
‘ஆயின், இவ்வாழ்வார்
அருளிச் செய்யின், அது பிரமாணமோ?’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ?
1அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்? 2‘தனது இச்சையால் மேற்கொள்ளப்பட்ட
பல சரீரங்களையுடையவன்’ என்கிறபடியே, தனக்கும் விரும்பத் தக்கதாய் இருப்பது ஆதலானும்,
3‘மஹாத்துமாவான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்டது இவ்வாலிங்கனமே; இவ்வாலிங்கனமானது
எல்லா வகைச் சொத்தாகவும் உள்ளது’ என்கிறபடியே, தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை
ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார். வான்சுடர் - முதலிலே தேஜோ ரூபமான திருமேனி;
மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய்
திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின், ‘வான் சுடர்’ என்கிறார். 4‘பேரொளியின்
கூட்டத்தைப் போன்றவன்’ என்பது விஷ்ணு புராணம். 5இப்படித் திருமேனி பஞ்ச சக்தி
மயமாய் இருக்கச் செய்தும், ‘ஆறு குணங்களையுடைய திருமேனி’ என்கிறது குணங்களுக்குப் பிரகாசகம்
ஆகையைச் சுட்டியேயாம்.
____________________________________________________________
1. இதனால், இவர்
அனுபவ பரவாஹ ரூபமான ஸ்ரீசூக்தியும் பரமப் பிரமாணம் என்றபடி.
2. ஸ்ரீ விஷ்ணு புரா.
6. 5 : 84.
3. ஸ்ரீ ராமா. யுத். 1
: 13.
4. ஸ்ரீ விஷ்ணு புரா.
1. 9 : 63
5. ‘இப்படித் திருமேனி
பேரொளிப் பிழம்பாய் இருப்பத்தற்குக் காரணம் பஞ்ச சக்தி மயமாக
இருத்தல்’ என்பது நம்பிள்ளையின்
திருவுள்ளம். ‘அப்படியாயின், ‘ஆறு
குணங்களையுடைய திருமேனி’ என்பது சேரும்படி என்?’ என்னும்
வினாவிற்கு
விடையாக, ‘இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய்’ என்று தொடங்கும் வாக்கியத்தை
அருளிச்செய்கிறார்.
பஞ்ச சக்திகளாவன : -
பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.
இவ்வுலகம் ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டது
போன்று, அவ்வுலகம் பஞ்ச
சக்திகளாலாயது என்பர்.
|