முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

கண

124

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    கண் செம் தாமரை - கடாக்ஷத்தாலே 1வவ்வல் இடப்பெற்றுச் சொல்லுகிற வார்த்தை. கை கமலம் - 2‘மென்மையான திருக்கை’ எனிகிறபடியே, தம்மை அணைத்த கை. ‘இவர், ஒரு கால் சொன்னதைப் பலகால் சொல்லுவான் என்?’ என்னில், முத்துக்கோக்க வல்லவன் முகம்பாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று, இவரும் ஒரோமுக பேதத்தாலே மாறிமாறி அனுபவிக்கிறார். திரு இடமே மார்வம் - அக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டி யாருக்கு இருப்பிடம் திருமார்வு. அயன் இடமே கொப்பூழ் பதினான்கு உலகங்களையு படைத்த பிரமன் திருநாபிக்கமலத்தை இருப்பிடமாகக் கொண்டிருப்பான். ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே - என் நாயனான சர்வேஸ்வரனுக்கு நீங்கின இடமும் உருத்திரனுக்கு இருப்பிடமாய்  இருக்கும். ‘ஓரிடம்’ என்னாதே, ‘ஒருவிடம்’ என்கிறது, ஒருவுதல் - நீங்குதலாய், நீங்கின இடம் என்றபடி. தாமச தேவதை இருப்பிடம் ஆகையாலே ‘நீங்கின இடம்’ என்று விருப்பு அற்ற வார்த்தை இருக்கிறபடி.

 

    ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு - என்னோடே வந்து கலக்கிற இடத்தில், நீங்குமிடம் ஒன்றும் இன்றியே வந்து கலந்தான். ‘தனக்கே உரியவரான பெரிய பிராட்டியாரைப் போன்று, பிறர்க்கு உரியவர்களான பிரமனுக்கும் சிவனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து வைப்பதே!’ என்று இந்தச் சீல்குணத்தை அனுசந்தித்து, 3வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘இது என்ன சீலத்தின் மிகுதி! ஓ’ என்பார் ‘ஓ’ என்கிறார்.             

(2)

 

157

 

        என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்;
        மின்னும் சுடர்மலைக்குக் கண்,பாதம், கைகமலம்;
        மன்னும் முழுஏழ் உலகும் வயிற்றின்உள;
        தன்னுள் கலவாதது எப்பொருளும் தான்இலையே.

 

    பொ - ரை : ‘என்னுள் வந்து கலந்தவனாகி மின்னுகின்ற ஒளி மயமான மலை போன்ற இறைவனுக்கு, சிவந்து கனிந்த திருவதரம் செந்

_____________________________________________________________

 

1. வவ்வலிடல் - குளிர் மிகுதியால் பற்கள் ஒளியுண்டாக விரைந்து தாக்கிக்கொள்ளுதல்.

 

2. ஹரி வம்ஸம்.

 

3. வித்தர - ஈடுபாடுடையவர். ‘முன்பு’ என்றது, ‘ஏறனைப் பூவனை’ என்ற
  திருப்பாசுரத்திலே நோக்கு.