முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 3

125

தாமரையைப் போன்றதாகும்; திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைகளும் தாமரை மலர்களேயாம்; நிலைபெற்ற பதினான்கு உலகங்களும் திருவயிற்றிலே உள்ளன; ஆதலால், இறைவனாகிய தனக்குள் கலவா தனவாகிய எப்பொருள்களும் இல்லை என்றவாறு.

    வி - கு : உலகு -இடவாகுபெயர். மலை என்றது, உருவகம். மூன்றாம் அடியில் ‘வயிற்றின் உள’ என உடன்பாட்டாற்கூறிய அதனை நான்காமடியில் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என எதிர் மறை முகத்தால் அருளிச்செய்கிறார். ‘கலவாத அது எப்பொருளும்’ என்பது ஒருமையோடு பன்மை மயங்கி வந்தது.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1’தன்னின் வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், தான் என்னைப்பற்றி உளனாய் என்னோடே வந்து கலந்தான்’ என்கிறார்.

    என்னுள் கலந்தவன் -‘அகஸ்தியர்க்கு உடன்பிறந்தவன்’ என்னுமாறு போன்று, நிரூபகம் இருக்கிறபடி. ‘நாராயணன், வாசுதேவன்’ என்பன போன்று, ‘என்னுள் கலந்தவன்’ என்று  காணும் அவனுக்குத் திருநாமம். செம் கனி வாய் செம் கமலம் - சிவந்து கனிந்த வாய் செங்கமலம் போலே இராநின்றது, மின்னும் சுடர் மலைக்கு - 2‘வாட்டம்இல் புகழ் வாமனன்’ இவரோடு கலந்த பின்பு வளர்ந்தபடியும், புகர் பெற்றபடியும், தரையிலே கால் பாவித்தரித்தபடியும், திண்மையை உடையனானபடியும் நோக்கி, ‘மின்னும் சுடர்மலை’ என்கிறார். கண் பாதம் கை கமலம் - முகமறிந்து கோத்தவாறே முத்து விலை பெறுமாறு போன்று, இவரும் திவ்விய அவயவங்களைச் சேர்த்து அனுபவிக்கிறார்.

    மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள - 3பிரவாஹ ரூபத்தாலே நித்தியமான எல்லா உலகங்களும் தன் சங்கற்பத்தைப் பற்றிக் கிடக்கின்றன. தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே -

_____________________________________________________________

1. ‘மன்னும் முழுவேழ் உலகும்’ என்று தொடங்கி, ‘என்னுள் கலந்தவன்’ என்னுமளவும்
  கடாக்ஷித்து அவதாரிகை.

2. திருவாய். 2. 4 : 11

3. ‘பிரவாஹ ரூபத்தாலே நித்தியம்’ என்றது, கங்கை முதலிய நதிகளிற்செல்லும் தண்ணீர்
  கழிந்து கொண்டேயிருக்கவும். மேன்மேலும் தண்ணீர் வந்து கொண்டேயிருப்பதனால்
  வெள்ளம் நிலைத்திருப்பதாகக் காணப்படுதல் போன்று, உயிர்கள்
  இறந்துகொண்டேயிருப்பவும், மேன் மேலும் பிறந்துகொண்டேயிருப்பதனால் உலகம்
  நிலைத்திருப்பதாகக் காணப்படுதல்.