தன
126 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
தன் திருவுள்ளத்தைப்
பற்றுக்கோடாக உடைத்து அன்றிக்கே இருக்கிற பொருள் யாது ஒன்று, அது இல்லை என்ற சொல்லுக்குப்
பொருளாகிறது. 1இனி, ‘தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு,
‘இறைவன் உருவமாக இல்லாத பொருள் தான் இல்லை என்று பொருள் கூறலுமாம். 2‘இயங்கியற்பொருளும்
நிலையிற்பொருளுமாகக் காணப்படுகின்றவை எவையோ, அவை எல்லாம் என்னை அன்றி இல்லை’ என்பது ஸ்ரீ
கீதை. உலகத்துப் பொருள்கள், இறைவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, சொரூபத்தாலே;
இறைவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது, காதலாகிய பண்பாலே.
(3)
158
எப்பொருளும் தானாய்,
மரதகக் குன்றம்ஒக்கும்;
அப்பொழுதைத் தாமரைப்பூக்
கண்பாதம்; கைகமலம்;
எப்பொழுதும் நாள்திங்கள்
ஆண்டுஊழி ஊழிதொறும்
அப்பொழுதைக்கும் அப்பொழுதுஎன்
ஆரா அமுதமே.
பொ-ரை :
எத்துணைச் சிறிய நேரமும் நாளும் மாதமும் வருடமும் ஊழி ஊழிகள்தோறும் அவ்வக்காலங்களில் எனக்குத்
தெவிட்டாத அமுதமாய் இருக்கின்ற இறைவன், எல்லாப் பொருள்களும் தனக்குள் அடங்கப் பெற்றவனாய்
மரகதமலையினை ஒத்திருக்கிறான்; அவனுடைய திருக்கண்கள் அப்பொழுது மலர்ந்த தாமரைப்பூவினை ஒத்திருக்கின்றன;
திருவடிகளும் அப்பொழுது மலர்ந்த தாமரைகள் ஆவனவாம்.
வி-கு :
‘ஆரா அமுதம் குன்றம் ஒக்கும்’ என்க. அமுதம் சொல்லால் அஃறிணையாதலின், ‘ஒக்கும்’ என்கிறார்.
ஈடு :
நான்காம் பாட்டு. ‘நீர் ஒருகால் கூறியதை ஒன்பதில் கால் கூறி இங்ஙனே கிடந்து படுகிறது என்?’
என்ன, ‘நான் அது தவிர்கிறேன்; நீங்கள் அவ்விஷயத்தை ஒருகால் இருந்தபடியே எப்பொழுதும்
இருக்கும்படி செய்ய வல்லீர்களோ?’ என்கிறார்.
_____________________________________________________________
1. ‘தன்னுள் கலவாதது
எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு இரண்டு கருத்து
அருளிச்செய்கிறார். முன்னையது, சங்கல்பாஸ்ரிதம்;
உள் - உள்ளம். இரண்டாவது,
சொரூபாஸ்ரிதம்; தன்னுள் - தன்னிடத்தில். ஸ்ரீகீதையின் சுலோகம்,
சொரூபாஸ்ரிதத்திற்கு
மேற்கோள்.
2.
ஸ்ரீ கீதை.
10 : 39.
|