முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

எப

128

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம் -1கலை காஷ்டை முதலியவைகளாலும் வேறுபடுத்த ஒண்ணாத மிகச்சிறிய காலம் அனுபவிப்பது, ஒரு நாள் அனுபவிப்பது, ஒரு மாதம் அனுபவிப்பது, ஓர் ஆண்டு  அனுபவிப்பது, கல்பந்தோறும் கல்பந்தோறும் அனுபவிப்பது, இப்படிக் காலமெல்லாம் அனுபவியாநின்றாலும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமேயாம். அதாவது, 2‘முன் கணத்தில் அனுபவம் போல அல்ல ஆயிற்று அடுத்த கணத்தில் அனுபவம் இருப்பது’ என்றபடி. ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின் கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டுஞானத்திற்கு; இங்கு 3விஷயந்தானே வேறுபடுகின்றது என்பதாம்.

(4)

159

        ஆரா அமுதமாய் அல்ஆவி யுள்கலந்த
        காரார் கருமுகில்போல் என் அம்மான் கண்ணனுக்கு
        நேராவாய் செம்பவளம்; கண்பாதம் கைகமலம்;
        பேராரம் நீண்முடிநாண் பின்னும் இழைபலவே.

    பொ-ரை : உண்ணத் தெவிட்டாத அமுதமாய், ஒரு பொருளாக மதிஅத்தற்குத் தகுதி இல்லாத என்னுடைய உயிருள் கலந்த, கார் காலத்தில் எழுகின்ற கரியமேகம் போன்ற என் தலைவனாகிய கண்ணபிரானுடைய திருஅதரத்தினைச் செம்பவளம் ஒப்பாகமாட்டது; திருக்கண்கள் திருவடிகள் திருக்கரங்களாகிய இவற்றைத் தாமரை மலர்கள் ஒப்பாகமாட்டா; பெரிய ஆரமும் நீண்ட திருமுடியும் அரைநாணும் மற்றுமுள்ள ஆபரணங்களும் மேலும் பலபலவேயாய் இருக்கின்றன.

    வி-கு : கார் கருமை; காலத்திற்கு ஆயிற்று; இருமடியாகு பெயர். கண்ணனுக்கு -ஆறாம் வேற்றுமையில் நான்காவது மயங்கிய மயக்கம். ‘நேரா’ என்னும் பன்மைப்பயனிலைக்கு, பவளம் கமலம்

_____________________________________________________________

1. ‘கலை. காஷ்டை’ என்பன, மிகச்சிறிய கால அளவுகள்; பதினெட்டு முறை இமை
  கொட்டுகிற கால அளவு ஒரு காஷ்டை எனப்படும்; காஷ்டை முப்பது கொண்டது ஒரு
  கலை எனப்படும்.

2. ‘முன் கணத்தில்’ என்று தொடங்கும் வாக்கியம், ‘அப்பொழுதைக்கு அப்பொழுது’ என்ற"
  அகரச்சுட்டின் பொருளை விளக்க வந்தது.

3. ‘விஷயந்தானே வேறுபடுகின்றது’ என்றது, இனிமையின் மிகுதியினாலே புதியதாய்த்
  தோன்றுகை.