கட
முதல் திருவாய்மொழி - பா. 4 |
13 |
கடலுக்குப் பிரிவுத்துன்பம்
கூடுமோ?’ எனின், 1பிரிவுத் துன்பம் பிராட்டியோடு ஸ்ரீபரதாழ்வானோடு வாசியற்று
இருந்தது; ஆதலால், கூடும். வாழி - இத்துன்பம் நீங்கி நீ வாழ்ந்திடுக. கனைகடலே - வாய் விட்டுக்
கூப்பிடமாட்டாமல் விம்மல் பொருமலாய்ப்படுகிற கடலே! இனி, ‘ஒலிக்கின்ற கடலே!’ என்று
பொருள் கோடலுமாம்.
(3)
114
கடலும் மலையும்
விசும்பும் துழாய்எம்போல்
சுடர்கொள் இராப்பகல்
துஞ்சாயால் தண்வாடாய்!
அடல்கொள் படைஆழி அம்மானைக்
காண்பான் நீ
உடலம்நோய் உற்றாயோ,
ஊழிதோறு ஊழியே?
பொ-ரை :
‘வடக்கிலிருந்து
வருகின்ற குளிர்ந்த காற்றே! கடலும் மலையும் ஆகாயமும் ஆகிய இவற்றைத்தடவிக்கொண்டு, சந்திர
சூரியர்களைக் கொண்ட இரவிலும் பகலிலும் எம்நைப் போன்று தூங்குகிறாய் இல்லை; பகைவர்களுடைய
மிடுக்கைக் கொள்ளுகின்ற சக்கரப்படையினையுடைய தலைவனைக் காணுவதற்கு, காலமுள்ள வரையிலும்
உடலோடு முடியும்படியான நோயினைக் கொண்டாயோ?’ என்கிறாள்.
வி. - கு :
‘துழாய்த் துஞ்சாய்’ என முடிக்க. துழாய் - வினையெச்சம். சுடர் - ஆகுபெயர், வாடை - விளியேற்றலின்,
‘ஆய்’ ஈறாகத் திரிந்தது. காண்பான் - வினையெச்சம். ‘சுடர்கொள் இரா’ என்பதற்கு ‘வெப்பத்தைக்கொண்டுள்ள
இரவு’ எனப் பொருள் கூறலுமாம்.
ஈடு : நாலாம் பாட்டு.
காற்று என்று ஒரு 2வியாபகதத்வமாய், அதுதான் காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான
வியசனத்தால், 3இருந்த இடத்தில் இருக்கமாட்டாமல், மடல் ஊருவாரைப்
_____________________________________________________________
1. ‘வெயர்த்த மேனியன்
விழிபொழி மழையன்மூ வினையைச்
செயிர்த்த சிந்தையன்
தெருமரல் உழந்துழந் தழிவான்
அயிர்த்து நோக்கினும் தென்திசை
யன்றிவே றறியான்
பயத்த துன்பமே உருவுகொண்
டென்னலாம் படியான்.’
(கம்பரா.மீட். 194)
‘அரிய மஞ்சினோடு
அஞ்சனம் முதலிய யாவும்
கரிய காண்டலும்
கண்ணினீர் கடல்புகக் கலுழ்வாள்
உரிய காதலின்
ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவெ னுந்துயர்
உருவுகொண் டாலான பிணியாள்.’
(கம்பரா. காட், 17)
என்னும் பாசுரங்கள் ஈண்டு
நினைத்தல் தகும்.
2. வியாபக தத்வம்
- எங்கும் பரந்து நிறைந்த பொருள்.
3. ‘துழாய்’ என்றதனை
நோக்கி, ‘இருந்த இடத்தில் இருக்கமாட்டாமல்’ என்கிறார்.
|