முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

134

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    தேன் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும் - மஹாராஜர் ‘நீர் வாலியைக் கொல்லமாட்டீர்’ என்ன, அவரை நம்பும்படி செய்வதற்காக, தேனையுடைத்தாய்ப் பனைத்து அடிகண்டு இலக்குக் குறிக்க ஒண்ணாதபடியாய் இருந்த மராமரங்கள் ஏழையும் எய்ததும், பூம்பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே - நல்ல தொடையை உடைத்தான திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப் பட்டவனாய், பேரரசு எனக் குறிக்கும் திரு முடியையுடையனாய், இவ்வழகுதன்னை நித்தியசூரிகளை அனுபவிப்பித்து அதனால் வந்த மேன்மை தோன்ற அழகியதாய்ப் போருக்குப் புறப்படுகின்ற இடபம் போலே, 1மேனாணித்திருக்கிற இருப்பு. இனி, ‘பூம்பினைய’ என்பதற்குப் ‘பூக்களோடு கட்டப்பட்ட’ என்று பொருள் கூறலுமாம்.

    ‘பொன் முடி அம் போர் ஏறு பள்ளி அமர்ந்ததுவும், ஏறு செற்றதுவும், மராமரம் எய்ததுவும் ஆன இவையெல்லாம், எனக்காகவேயாம்,’ என ஒரு சொற்றொடர் கூட்டிப் பொருள் முடிக்க.                          

(7)

162

        பொன்முடிஅம் போர்ஏற்றை எம்மானை நால்தடந்தோள்
        தன்முடிவுஒன்று இல்லாத தண்துழாய் மாலையனை
        என்முடிவு காணாதே என்னுள் கலந்தானைச்
        சொன்முடிவு காணேன்நான்; சொல்லுவதுஎன்? சொல்லீரே.

    பொ-ரை : ‘ஒளி பொருந்திய முடியைத் தரித்த போர் ஏறு போன்றவனை, என் நாயனை, நான்காகப் பருத்த வலிய தோள்களையுடைய, தன் பெருமையின் எல்லைக்கு முடிவு ஒன்று இல்லாத, குளிர்ந்த திருத்துழாய் மாலையினைத் தரித்த இறைவனை, என்னுடைய தாழ்ச்சியின் முடிவினைப் பாராமல் என்னுள் வந்து கலந்தவனைப் பாசுரமிட்டுச் சொல்லுவதற்கு ஒரு வகையினைக் காணேன்; சொல்லுதல் எப்படி? சொல்லுங்கோள்’ என்றவாறு.

    வி-கு : நான்கு தடம் - நால்தடம். சொல்லுவது - தொழிற்பெயர்.

    ஈடு : எட்டாம் பாட்டு. ‘அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் என் தண்மையைப் பாராது, என்னோடே வந்து கலந்த இம்மகா குணத்தை என்னால் பேசி முடியாது,’ என்கிறார்.

____________________________________________________________

1. மேனாணித்து - செருக்கோடு