New Page 1
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 8 |
135 |
பொன் முடி அம்
போர் ஏற்றை - 1உபய விபூதிகட்கும் கவித்த முடியினை உடையனாய், அதனால் வந்த
இறைமைத் தன்மையின் 2உறைப்புத் தோன்ற இருக்கின்றவனை, எம்மானை - தனது இறைமைத்
தன்மையின் எல்லையினைக் காட்டி என்னை அடிமையின் எல்லையில் நிறுத்தினவனை, நான்கு தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை - நான்காய்ப் பணைத்திருந்துள்ள தோள்களை
உடையனாய், தன்னைப் பேசப் புக்கால் வேதங்களும் எல்லை காணமாட்டாது 3‘வாக்கிற்கு
அப்பாற்பட்டவனே’ என்று மீளும்படி இருப்பானாய் இருக்கின்ற தண்துழாய் மாலையனை. எல்லை காண
வொண்ணாத பரம்பொருளுக்குத் திருத்துழாய் மாலை அடையாளம் ஆதலின், ‘தன் முடிவு ஒன்று இல்லாத
தண்துழாய் மாலையனை’ என்கிறார்.
என் முடிவு காணாதே
என்னுள் கலந்தானை - 4‘அறியாதவராக
இருக்கின்றார்’ என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் 5செம்பளித்து வந்து
கலந்தான். இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று, இவர் பக்கல்
தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி. இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில்
‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக, அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து ஒரு கணத்தையும்
சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை. இனி, இத்தொடர்மொழிக்கு,
‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது,
பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ என்று கூறலுமாம். சொல்லுவது என் சொல்லீரே - ‘மற்றை விஷயங்களை
அனுபவித்து
_____________________________________________________________
1. உபய விபூதி - இவ்வுலகமும்
மோக்ஷவுலகமுமான இரண்டு உலகங்கள். உபயம் -
இரண்டு. விபூதி -உலகம், செல்வம்.
2. உறைப்பு - திண்மை
3. தைத்தீரிய ஆனந். 9 : 1
4. ஸ்ரீ சஹஸ்ரநாமம்.
5. செம்பளித்து - மூடிக்கொண்டு.
‘கண்செம் பளித்திருந்து
கைத்துருத்தி நீர்தூவி
அம்புதத்தைப் பார்த்திருப்பான்
அற்று.’
(ஞானசாரம், 33)
|