முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அவற

136

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

அவற்றுக்குப் பாசுரமிட்டுச் சொன்னவர்களாய் இருக்கின்ற நீங்கள் தாம் சொல்ல வல்லீர்களோ?’ என்றபடி..

163

        சொல்லீர்என் அம்மானை; என்ஆவி ஆவிதனை;
        எல்லைஇல்சீர் என்கரு மாணிக்கச் சுடரை:
        நல்ல அமுதம், பெறற்குஅரிய வீடுமாய்
        அல்லிமலர் விரைஒத்து ஆணல்லன் பெண்அல்லனே.

    பொ-ரை : என் தலைவனை, எனது உயிர்க்குள் உயிராக இருக்கின்றவனை, முடிவில்லாத மிக்க புகழினையுடைய, என்னுடைய கருமாணிக்கம் போன்ற ஒளியுருவனை, எல்லோரும் சேர்ந்து சொல்லலாமாகில் சொல்லுங்கள்; சிறந்த அமுதம் போன்று இனியனாய், எளிதில் பெறுதற்கரிய மோக்ஷ உலகிற்குத் தலைவனாய், தாமரை மலரின் வாசனையினை ஒத்தவனாய், ஆணும் அல்லாதவனாய்ப் பெண்ணும் அல்லாதவனுமாய் இருக்கின்றான் அவ்விறைவன்.

    வி-கு : ‘சொல்லீர்’ உடன் பாட்டில் வந்தது. ‘எனது ஆவி ஆவியும் நீ’ என்றார் முன்னும், நல்ல அமுதம் என்பதில் நல்ல என்பது இனம் விலக்க வந்தது. ஆய், ஒத்து என்னும் வினையெச்சங்கள், அல்லன் என்னும் குறிப்பு முற்றுடன் முடிந்தன. ஆய் என்பதனை அமுதம் என்பதனோடும் கூட்டுக. அல்லி மலர் - தாமரை மலர்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘பாசுரம் இல்லை’ என்னா, கைவாங்கமாட்டாரே; சம்சாரிகளைப் பார்த்து, ‘என் நாயனான சர்வேஸ்வரனை நீங்கள் அனைவரும் கூடியாகிலும் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறார்.

    சொல்லீர் என் அம்மானை - சிற்றறின்பங்களை அனுபவித்து அவற்றிற்குப் பாசுரமிட்டுச் சொல்லியிருக்கிற நீங்களாகிலும் சொல்ல வல்லீர்களோ? என் அம்மானை - தன்னுடைய குணங்களாலும் செயல்களாலும் என்னை முறையிலே நிறுத்தினவனை, என் ஆவி ஆவிதனை - என் ஆத்துமாவுக்குள் ஆத்துமாவாக உள்ளவனை, எல்லை இல் சீர்
2
கருமாணிக்கச் சுடரை அளவு இறந்த நற்குணங்களையும் நீலமணி போன்று குளிர்ந்த

_____________________________________________________________

1. ‘மேல், ‘சொல்லுவதென் சொல்லீர்’ என்றவர், ஈண்டுச் ‘சொல்லீர்’ என்கிறது என்?’
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பாசுரமில்லை’ என்று தொடங்கி. நாயன் -
  தலைவன்; இச்சொல் வழக்கு, வியாக்கியானங்களில் பல இடங்களிலும் பயிலுதல்
  காணலாம்.

2. ‘கருமாணிக்கச்சுடர்’ என்றது, ஈண்டு விக்கிரதகத்தைக் குறித்தது.