வ
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 10 |
137 |
வடிவழகினையும் என்னை
அநுபவிப்பித்தவனை. இதனால், 1திவ்யாத்தும சொரூப குணங்களுக்கு எல்லை காணிலும்
விக்கிரகங்களின் குணங்களுக்கு எல்லை காண முடியாமல் இருத்தலைத் தெரிவித்தபடி. நல்ல அமுதம் -
நித்தியமுமாய்ப் போக்கியமுமான அமுதம்; 2இனி, இதற்குப் ‘பிராகிருத போக்கியங்களில்
தலையான அமுதம்’ என்று கூறலுமாம்.
பெறற்கு அரிய
வீடுமாய் - ஒருவராலும் முயற்சியால் அடைய முடியாத மோக்ஷ புருஷார்த்தமுமாய், அல்லி மலர் விரை ஒத்து
- இன்பத்துக்குத் தாமரைப்பூவில் வாசனையோடு ஒத்து. ஆண் அல்லன் பெண் அல்லன் -3இங்குக்
காணப்படுகிற புருஷ சாதியினைச் சேர்ந்தவன் அல்லன்; 4பெண் அல்லன் என்றதைப்
போன்று, ஆண் அல்லன் என்ற அதுதன்னையும் கழிக்கிறது. 5இத்தால், உவமை இல்லாதவன்
என்றபடி.
(9)
164
ஆண்அல்லன் பெண்அல்லான்
அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன்அல்லன்
இல்லைஅல்லன்
பேணுங்கால் பேணும்
உருவாகும் அல்லனும் ஆம்
கோணை பெரிதுஉடைத்துஎம்
பெம்மானைக் கூறுதலே.
பொ-ரை :
‘ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; ஒரு பாலிலும் சேராத அலியும் அல்லன்; கண்களாற் காண்பதற்கும்
இயலாதவன்; உள்ளவன் அல்லன்; இல்லாதவனும் அல்லன்; அடியார்கள் விரும்புகின்ற காலத்தில்
விரும்புகின்ற வடிவினையுடையவன் ஆவான்; அப்படி அல்லாதவனாயும் இருப்பான்; ஆதலால், எம்பெருமானைச்
சொல்லுமிடத்து மிக்க முறுக்காக இருக்கின்றது என்றபடி
_____________________________________________________________
1. 'எல்லையில் சீர்’
என்றதனால், இங்ஙனம் அருளிச்செய்கிறார்.
2. ‘நல்ல’ என்ற
அடைமொழிக்கு, வேறும் ஒரு வகையில் பொருள் அருளிச் செய்கிறார்,
‘இனி’ என்று தொடங்கி.
3. ‘இங்குக் காணப்படுகிற
புருஷ சாதியினைச் சேர்ந்தவன் அல்லன்’ என்றது, ஆண்
தன்மையாலே பெண்களைக் கழித்தது போன்று,
புருஷர்களுக்கு உத்தமனாந்தன்மையாலே
நாட்டில் புருஷர்களோடு உண்டான ஸஜாதீயத்தையும் கழிக்கிறது
என்கை.
4. “ஆணல்லன்” என்ன
அமையாதோ? ‘பெண்ணல்லன்’ என்கிறது என்?’ என்ன,
‘திருஷ்டாந்தம்’ என்கிறார், ‘பெண்ணல்லன்
என்றதைப் போன்று’ என்று தொடங்கி.
‘அதுதன்னையும்’ என்றது, புருஷசாதியையும் என்றபடி.
5. ‘ஆயின், ஆண் தன்மை
இல்லையோ?’ என்ன, ‘இத்தால்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
|