முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 11

139

பெண்ணல்லன்’ என்கின்ற இத்தால் 1சஜாதீய விஜாதீய நிஷேதம் செய்தபடி.

    காணலும் ஆகான் -ஆண் பெண் அலி என்னும் இவற்றைக் காண்கிற பிரமாணங்களால் காணப்படாதவன். இத்தால், 2ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்கை. உளன் அல்லன் அல்லாதார்க்கு. இல்லை அல்லன், அடியார்கட்கு. இவற்றை விரிக்கிறார் மேல்: பேணுங்கால் பேணும் உருவாகும் -3‘தேவீ, நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானேஉனக்குப் புத்திரனாய்த் தோன்றவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானே உனக்குப் புத்திரனாய்த் தோன்றிவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறப்பான். இனி, இதற்குத் 4‘தன்னை அர்த்திக்குங் காட்டில் அன்போடு தன்னைப் பேணி மறைக்கவேண்டும்படி வந்து அவதரிப்பான்’ என்று கூறலுமாம். அல்லனுமாம் - இப்படித்தாழ நிற்பினும், சிசுபாலன் முதலியோர்க்குக் கிட்டவும் அரிதாக இருப்பான். எம்பெருமானைக் கூறுதல் கோணை பெரிதுடைத்து - இந்த இந்த நிலைகளை எனக்கு அறிவித்த இறைவன் படிகளைப் பேச என்றால் சால மிறுக்குடைத்து.                                               

(10)

165

        கூறுதல்ஒன்று ஆராக் குடக்கூத்த அம்மானைக்
        கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
        கூறினஅந் தாதிஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
        கூறுதல்வல் லார்உளரேல் கூடுவர் வைகுந்தமே.

_____________________________________________________________

1. சஜாதீய விஜாதீய நிஷேதம் - ஒரே சாதியிலுள்ள மற்றைப் பொருள், வேறான
  சாதியிலுள்ள மற்றைப்பொருள் இவற்றினின்றும் விலக்கியபடி.

2. ‘ஏகப்பிரமாண கம்யத்வ சாம்யமுமில்லை’ என்றது, ‘ஒரே பிரமாணத்தால் அறியத்தக்க
  ஒப்புமையும் இல்லை’ என்றபடி.

3. ‘பேணுங்கால் பேணும் உருவாகும்’ என்பதற்கு, இரு பொருள் அருளிச்செய்கிறார்:
  முன்னையது, ‘அடியார்கள் ஆசைப்பட்ட வடிவோடே அவதரிக்கும்’ என்பது;
  பின்னையது, ‘மங்களாசாசனம் செய்ய வேண்டும்படியான விக்கிரகத்தையுடையவனாய்
  அவதரிக்கும்’ என்பது. முதற்பொருளில், பேணுதல் - விரும்புதல். இரண்டாவது
  பொருளில், பேணுதல் - பரிவு.