New Page 1
14 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
போன்று உடலிலே
புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய், 1சன்னிசுரம் வந்தவர்களைப்
போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.
கடலும் மலையும்
விசும்பும் துழாய் - அளவு அற்ற பெரிய கடலும், செறிந்த மலையும், இடவெளியினைக் கொடுக்கிற ஆகாயமும்
என்னும் இவற்றைத் தடவி. எம் போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தண் வாடாய் - ஆதித்தன்
மறைந்த இரவோடு ஆதித்தனையுடைய பகலோடு வேற்றுமை அற எம்மைப் போன்று உறங்குகின்றாய் இல்லை;
குளிர்ந்த வாடாய்! சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று முடியுமளவினை அடைந்தாய் என்பாள்,
‘தண்வாடாய்’ என்கிறாள். ‘சுடர் கொள்’ என்றது, சிலேடை: ‘சுடரைக் கொண்ட’ அதாவது,
‘மறைந்த’ எனவும், ‘சுடரையுடைய’ எனவும் இரு பொருள்படும். மறைந்த என்பதனோடு இரவையும், உடைய
என்பதனோடு பகலையும் கூட்டிப் பொருள் கோடல் வேண்டும். ‘ஆயின், ‘துழாய் எம்போல்’ என்பதற்கு,
இவள் துழாவினாளோ?’ எனின், 2காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே
திருக்கோவ, லூரே ஊராய
எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினால் என்க. ‘ஆயின், இங்குத் திருப்பாற்கடலும்
பரமபதமும் கூறினாள் இலளே?’ எனின், அவையும் இறைவன் தங்கியிருக்கின்ற இடங்களேயாதலின்,
‘ஊராய எல்லாம்’ என்றதனால் பெற வைத்தாள். ஆக, ‘திருப்பாற்கடலோடு திரு மலையோடு பரமபதத்தோடு
வாசியறத் 3தேடுவார்க்குப் போலியாய் இருக்கின்றது’ என்றபடி.
இனி, ‘கடலும்
மலையும் விசும்பும் துழாய்’ என்பதற்கு, ‘சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராம இலக்குமணர்கள்
வனங்களிலும் மலைகளிலும் நதிகளிலும் தடாகங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக்
_____________________________________________________________
1. ‘சன்னிசுரம் வந்தவர்களைப்
போன்று’ என்றது, உள்ளில் வெதுப்பும், புறத்தில்
குளிர்ச்சியும் தோன்றுகைக்காக, ‘குளிர்ந்திருந்தது’
என்றது இவளுக்கு இப்படித்
தோன்றியது என்பதனைத் தெரிவித்தபடி .
2. சிறிய திருமடல்,
69-78.
3. தேடுவார் - ஆழ்வார்
நாயகியும், பரகால நாயகியும்
4. ஸ்ரீராமா. ஆரண். 61 :
20.
‘தசரத சக்கரவர்த்தியின்
குமாரர்கள் ஆகையாலே, தேடப் பிறந்தவர்கள் அல்லர்’
என்றும்,
‘சீதாம்’என்றதனாலே,
‘தேடிக்கண்டிலோம் என்று ஆறியிருக்கலாம் விஷயமன்று’ என்றும்,
‘இத்தால், அவர்கள் ஜீவிக்கை
என்று ஒரு பொருளுண்டோ? ஜீவித்தல் சக்கியமன்று’
என்றும் உரையாசிரியர் அச்சுலோகத்திற்கு
விசேடப்பொருள் அருளிச் செய்வர்.
|