முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

என

148

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

என்னும் பாணத்தைக், கிருஷ்ணன் அருச்சுனனை மறைத்துத் தன் மார்பிலே ஏற்றுக்கொண்டான்’ என்கிறபடியே, 1பகதத்தன் விட்ட சத்தியை, அருச்சுனனைத் தள்ளித் தன் 2அந்தப்புரத்திலே ஏற்றாற்போலே, தாம் ஏறிட்டுக்கொண்டு அனுபவித்தல் செய்யுமித்தனை. 3பாவங்கள்தாம் - அசேதனமாய் இருப்பன சில கிரியா விசேடங்களாய் அவை செய்தபோதே நசிக்கும்; செய்தவன் அறிவில்லாதவன் ஆகையாலே செய்ததை மறப்பான்; முற்றறிவினனான சர்வேஸ்வரன் உணர்ந்திருந்து பலத்தை நுகர்விக்க நுகர்வான் இத்தனை. அவன் மார்பிலே ஏற்றுக்கொள்கையாவது. ‘பொறுத்தேன்’ எனத் தீர்தல். 4‘அபூர்வங்காண், சத்திகாண், பலாநுபவம் பண்ணுவிக்கிறது’ என்று கூறுவதைக் காட்டிலும், முற்றறிவினனான இறைவன் செய்விக்கிறான் என்கை அழகிதே அன்றோ?

 

     உன்னை - அடியார்களிடத்தில் பக்ஷபாதத்தையுடைய உன்னை. நான் -‘ஆடியாடி’ என்னும் திருவாய்மொழியில் விடாய்த்த நான். இனி, ‘நீ உய்விக்க, உன்னாலே உளேனான நான்’ என்று கோடலுமாம். பிடித்தேன் கொள் - பிடித்தேனாகவே திருவுள்ளம் பற்று. ‘முன்னும் சொல்லிப்போரும் வார்த்தை அன்றோ இது?’எனின், அங்ஙனமன்று; சிக்கெனப் பிடித்தேன் கொள் -என்னைப் பெறுகைக்கு முற்பட்ட நீ விடிலும் விடாதபடி நான் பிடித்தேனாகவே திருவுள்ளம் பற்று. அவனைப் பார்த்து, 5‘துக்கப்பட வேண்டா’ என்கிறார். ( 1 )

_____________________________________________________________

1. இச்சரிதப்பகுதியை வில்லி பாரதம், பன்னிரண்டாம் போர்ச் சுருக்கம், 54 முதல் 67 முடியவுள்ள செய்யுளிற்காண்க.

2. அந்தப்புரம் - மார்பு.

3. ‘ஏறிட்டுக்கொள்ளுகையாவது எது?’ என்ன, ‘பாவங்கள் தாம்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

4. ‘இறைவனே பலனைக் கொடுக்கின்றவனாக வேண்டுமோ? கிரியை யாதிகள் பலனைக் கொடுக்கின்றன ஆனாலோ?’
  என்ன, அருளிச்செல்கிறார் ‘அபூர்வங்காண்’ என்று தொடங்கி. அபூர்வமாவது, ஒருவன் யாதானும் ஒரு கர்மத்தைச்
  செய்ய அதனால் தோன்றுவது.

5. சரமச்சுலோகக் கருத்து, ‘அவனைப் பார்த்து’ என்று தொடங்கும் வாக்கியம்.