167
ஆறாந்திருவாய்மொழி - பா. 2 |
149 |
167
சிக்கெனச் சிறிதுஓர்
இடமும் புறப்படாத்
தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப்
புகுந்தான் புகுந்ததன்பின்
மிக்க ஞான வெள்ளச்
சுடர்விளக்காய்த் துளக்குஅற்று
அமுதமாய் எங்கும்
பக்கம்நோக்கு அறியான்என்
பைந்தாமரைக் கண்ணனே.
பொ - ரை :
அழகிய தாமரை போன்ற கண்களையுடைய என் இறைவன், மிகச்சிறிய இடமும் புறம்பு போகாதபடி உலகுகளைத்
தன் நினைவிற்குள்ளே ஒரே விதமாக அடக்கி, வெளியில் புறப்படாதபடி என் மனத்திற்புகுந்தான்;
புகுந்த பின்னர், ஞானவெள்ளத்தால் வந்த மிக்க ஒளியை உடையவனாய் நடுக்கமும் தீர்ந்து, அமுதம்
போன்று இனியனாய், ஓரிடத்திலும் பக்கத்தைப் பார்க்கின்றிலன்.
வி-கு :
‘சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிச் சிக்கெனப் புகுந்தான்’ என
மாற்றுக. விழுங்குதல் - அடக்குதல். ‘புறப்படா விழுங்கினான்’ எனக் கூட்டுக. புறப்படா - புறப்படாதபடி.
ஈடு :
இரண்டாம் பாட்டு. 1மேல் பாசுரத்தில் இறைவன், ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’
என்று ஐயங்கொண்டபடியை அருளிச்செய்தார்; இவர், ‘விடேன்’ என்ற பின்பு அவனுக்கு வடிவிற்பிறந்த
பௌஷ்கல்யத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தில்.
சிறிது ஓர் இடமும்
புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிச் சிக்கெனப் புகுந்தான் - மிகச்சிறியதாய்
இருப்பது ஒரு பொருளும் தன் பக்கல்நின்றும் பிரிகதிர்ப்பட்டு நோவுபடாதபடியாகத் தன் நினைவில்
ஆயிரத்தில் ஒரு கூற்றிலே உலகங்களை ஒருகாலே வைத்து, இனிப் பேராதபடி புகுந்தான். ‘நாம் ஆழ்வாரை
அனுபவிக்கும் போது, செருப்பு வைத்துத் திருவடி தொழப் புக்காற் போலே
_____________________________________________________________
1. மேற்பாசுரத்தின்
பொருளை அநுவதியாநின்று கொண்டு, ‘மிக்க ஞான வெள்ளச் சுடர்
விளக்காய்’ என்பது போன்றவைகளைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
இவர். ‘பிடித்தேன் கொள் சிக்கென’ என்ற பின்னர்,
இறைவனுடைய ஞானாதிகளிற்பிறந்த
ஒளியின் தன்மையைச் சொல்லுகிறார் என்று இப்பாசுரத்துக்குச்
சங்கதி என்றபடி. ‘சுடர்
விளக்காய்’ என்றதனை நோக்கி, ‘வடிவிற்பிறந்த பௌஷ்கல்யத்தைச்
சொல்லுகிறார்’
என்கிறார். பௌஷ்கல்யம் - நிறைந்திருக்கும் தன்மை.
|