முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

முதல் திருவாய்மொழி - பா. 15

15

கொண்டு திரிந்தார்கள்,’ என்கிறபடியே, இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது போன்று, வாடையும், கடலையும் மலையையும் விசும்பையும் துழாவிக்கொண்டு வந்தது,’ என்று பொருள் கூறலுமாம்.

    அடல்கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் - ‘மிடுக்கை யுடைத்தான படையாகிற திருவாழியைக் கையிலேயுடைய, சர்வேஸ்வரனையோ நீயும் காண ஆசைப்பட்டாய்? 1‘இது எனக்கு நோன்பு’ என்னும் நிலை தவிர்ந்து, பாரதப்போரில் மூன்றாம் நாள் அருச்சுனன் இளைத்துக் கைவாங்கினவாறே, செய்த சூளுறவையும் அழித்துத் திருவாழியைக்கொண்டு 2ஸ்ரீவீடுமரைத் தொடர்ந்தான்; ஆதலால், செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள், ‘அடல்கொள் படையாழி அம்மான்’ என்கிறாள். அடல் கொள் படை அடல் என்றது மிடுக்கு. எதிரிகள் மிடுககைக் கொள்ளும் படை என்னுதல், தான் மிடுக்கையுடைத்தாய் இருக்கும் படை என்னுதல்.

    நீ உடலம் நோய் உற்றாயோ - கைம்மாறு கருதாது உதவி செய்யும் நீ.  எல்லாப் பொருள்களுக்கும் ரக்ஷகமான சரீரத்திலே நோவு வரும்படி பட்டாய் ஆகாதே! சஞ்சாரம் இதற்கு எப்பொழுதும் உள்ளதொரு தன்மை; இதனை அறியாது, எப்பொழுதும் சஞ்சரிக்

____________________________________________________________

1. ஸ்ரீராமா. யுத் 18 : 33.

2. ஏஹ்யேஹி - கெட்டோடுகிறவன் பிற்காலித்து நின்று ‘எங்கள் அம்மை நாயனார் மாறி
  மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என்? புல்லாம் புஜபத்ர நேத்ர-என்றும் ஆணை
  மறுத்தால் சேதம் என்? சீறிச்சிவந்த கண்ணழகைக் காணப்பெற்றால். பிரஸஹ்ய மாம்
  பாதய - ‘ஆயுதமெடேன்’ என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம்
  இருக்கிறவரையில் தோலேன்; ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையறுத்தருளீர்,’
  லோகநாத-உமக்கும் வீரத்துக்கும் தோலோன்; முதன்மைக்குத் தோற்பன்’ என்பது
  அவ்விடத்துப் பாரதச் சுலோகத்துக்கு உரைகாரர் அருளிச் செய்த பொருள். (பார. பீஷ்ம.
  59 : 98)

  ‘ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழி யிடைத்துயிலும்
  காரண சிற்குண ரூப மலர்க்கொடி காதல் மனத்துறையும்
  நாரண அற்புத வானவ ருக்கொரு நாயக நிற்பணியும்
  வாரண முத்தி விசால தலத்திடை வாழ்வுற வைத்தவனே.’

  என வீடுமன் துதித்தலை, வில்லி பாரதம் மூன்றாம் போர்ச்சருக்கத்து 14 முதல் 20 முடிய
  உள்ள செய்யுள்களில் காண்க.