New Page 1
152 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
‘இங்கே 1சொட்டைக்
குலத்தில் யாரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள, ‘அடியேன்’ என்று ஆளவந்தாரும்
எழுந்தருளி வந்து கண்டு, ‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச்செய்கைக்கு ஏது
என்?’ என்ன, ‘நானும் தானுமாக அனுபவியாநின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக்
கூறினும் அவள் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம அங்கே எட்டிப்
பார்த்தான்; இப்படி அவன் பார்க்கும்போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தார் உண்டாகவேண்டும்
என்று இருந்தேன் காணும்,’ என்று அருளிச்செய்தார். என் பைந்தாமரைக் கண்ணன் - ‘ஆடியாடி’ என்ற
திருவாய் மொழியில் ஆற்றாமையால் வந்த தாபமும் தீர்ந்து திருக்கண்களும் குளிர்ச்சி பெற்றவன்
ஆனான்.
(2)
168
தாமரைக் கண்ணனை
விண்ணோர் பரவும்
தலைமகனைத்
துழாய்விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப்
பொன்மலையை
நாம்மருவி நன்குஏத்தி
உள்ளி வணங்கி
நாம்மகிழ்ந்து
ஆட நாஅலர்
பாமருவி நிற்கத் தந்த
பான்மையே! வள்ளலே!
பொ-ரை :
தாமரைக்கண்ணனாய் விண்ணோர் துதிக்கின்ற தலைமகனாய் வாசனையையுடைய பூக்கள் பொருந்திய திருத்துழாய்
மாலையைத் தரித்த எம்பிரானாய்ப் பொன்மலையாய் இருக்கின்ற உன்னை, வள்ளன்மை உடையவனே! நான்
வந்து கிட்டி நன்கு ஏத்தி நினைத்து வணங்கி நான் மகிழ்ந்தாடும்படியாக நாவிலே அலரும்படியான
பாசுரங்களிலே பொருந்தி நிற்கும்படி திருவருள் செய்த தன்மைதான் என்னே!
வி-கு :
‘தாமரைக்கண்ணனை’ என்பது போன்ற இடங்களில் ஐகாரம்: அசைநிலை. அலர்பா : வினைத்தொகை.
ஈடு
: மூன்றாம் பாட்டு. 2‘நித்தியசூரிகளுக்கும் அவ்வருகானவன் தன்னை நான் தேசிகனாய்
அனுபவிக்கும்படி பண்ணின இதுவும் ஓர் ஒளதார்யமேதான்’ என்கிறார்.
_____________________________________________________________
1. சொட்டைக்குலம் - ஸ்ரீநாதமுனிகளுடைய
திருவமிசம். ஆளவந்தார் -
ஸ்ரீநாதமுனிகளுக்குத் திருப்பேரனார்.
2. ‘விண்ணோர் பரவும்
தலைமகனை, நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே
வள்ளலே’ என்ற பதங்களைக் கடாக்ஷித்து
அவதாரிகை.
|