முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஆறாந்திருவாய்மொழி - பா. 3

153

    தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை - ஒருகால் திருக்கண்களாலே குளிர நோக்கினால் அதிலே தோற்றுச் சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று 1அடைவு கெட ஏத்தாநிற்பர்கள் ஆயிற்று நித்தியசூரிகள். 2‘ஜமதக்நியின் புதல்வரும் அடைவு கெடப் பேசுகிறவருமான பரசுராமரிடத்தில் இப்பொருள் கேட்கப்பட்டது’ என்பது பாரதம். தலை மகனை - இவர்கள் ஏத்தாநின்றாலும் 3‘குற்றம் இல்லாதவர், அடைவதற்கு முடியாதவர்’ என்கிறபடியே, அவன் பரன் ஆகவே இருப்பான். துழாய் விரை பூமருவு கண்ணி எம்பிரானை - விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க்கண்ணி எம்பிரானை. நித்தியசூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்; இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான். அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’ என்றபடி. பொன் மலையை - என்னுடைய கலவியால் எல்லை இல்லாத அழகையுடையவனாய், கால் வாங்க மாட்டாதே இருக்கிறவனை. இனி, ‘தாம் ஏத்தியபடியாலே வளர்ந்தபடியைத் தெரிவிப்பார், 5பொன் மலையை’ என்கிறார்’ எனலுமாம். ஆக, இதனால், இவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்றபடியைத் தெரிவித்தபடி. நாம் மருவி - 6‘அருவினையேன்’ என்று அகலக்கூடிய நாம் கிட்டி. நன்கு ஏத்தி - நித்தியசூரிகள் ஏத்தக்கூடிய பொருளை நன்றாக ஏத்தி; 7‘வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை, எந்தையே என்பன்’ என்று முன்பு அகன்றவர் ஆதலின், இப்பொழுது ‘நாம் நன்கு ஏத்தி’ என்கிறார். இனி 8‘ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு

_____________________________________________________________

1. பரவுதல் - அடைவு கெடக் கூப்பிடுதல்; இது, பத்தி பாரவஸ்யத்தின் தொழில்.

2. பாரதம், மோக்ஷதர்மம். இச்சுலோகம், அடைவு கெடப் பேசுதற்கு மேற்கோள்.

3. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 1 : 48.

4. மால் ஆக்கினான் -மயக்கத்தை அடையச் செய்தான்.

5. ‘பொன்மலையை’ என்றதற்கு இரண்டு கருத்து அருளிச்செய்கிறார்: ஒன்று, நின்ற
  நிலையிலே நிற்றல்; ஒன்று, வளர்தல்.

6. திருவாய்மொழி. 1. 5 : 1,

7. திருவாய்மொழி. 1. 10 : 7.

  ‘நன்கு ஏத்தி’ என்பதற்கு இருபொருள்: ஒன்று, ‘தாழ்மையை நினைத்து அகன்ற நான்
  அது தவிர்ந்து நன்றாக ஏத்தி’ என்பது. மற்றொன்று. ‘அபரிச்சிந்நவிஷயத்தை மறுபாடுருவ
  ஏத்தி’ என்பது. மறுபாடுருவல் - பின்னே புறப்படுதல்.

8. தைத்திரீய ஆனந். 9 : 1.