169
ஆறாந்திருவாய்மொழி - பா. 4 |
155 |
169
வள்ளலே! மதுசூதனா!
என்மரதக மலையே!
உன்னை நினைந்து
எள்கல் தந்த எந்தாய்!
உன்னை எங்ஙனம் விடுகேன்?
வெள்ள மேபுரை நின்புகழ்
குடைந்துஆடிப் பாடிக்
களித்து உகந்துகந்து
உள்ள நோய்கள் எல்லாம்
துரந்து உய்ந்துபோந்து இருந்தே.
பொ-ரை:
‘வள்ளலே! மதுசூதனா! என்னுடைய மரதக மலையே! உன்னை நினைத்தலால், மற்றைப்பொருள்களை இகழும்படியான
தன்மையை எனக்குக் கொடுத்த எந்தையே! வெள்ளத்தைப் போன்ற நின் புகழ்களில் மூழ்கி ஆடிப்பாடி
மகிழ்ந்து அம்மகிழ்ச்சியிலே உயர்ந்து என்னிடத்திலுள்ள நோய்களை எல்லாம் நீக்கி அதனால்
உயர்வு பெற்று உன்னிடத்திற்போந்திருந்தேன்; ஆதலால். இனி, உன்னை எங்ஙனம் விடுகேன்!’ என்றவாறு.
வி-கு : நினைந்து
-செயவென் எச்சத்திரிபு. ‘நினைத்தலால் எள்கல் தந்த எந்தாய்’ என்க. புரை - உவம உருபு. உகத்தல்
- உயர்தல்; ‘உகப்பே உயர்தல் உவப்பே உவகை’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். இருந்து
- வினைமுற்று. ‘கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும், தொல்லது விளைந்தென நிலம்வளம்
கரப்பினும்’ ( புறம். 203 ) என்ற இடத்துக் கழிந்து, பொழிந்து என்பன, வினை முற்றுப்பொருளவாதல்
காண்க. அன்றி, இதனை எச்சமாகக் கோடலுமாம்.
ஈடு : நாலாம்
பாட்டு. ‘நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட’ என்று தம்முடைய தாழ்வினைச்
சொன்னவாறே, ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று அவன் ஐயம் கொள்ள, ‘நிர்ஹேதுகமாக
1உன் வடிவழகை என்னை அனுபவிப்பிக்க அனுபவித்து அத்தாலே உருக்குலைந்த நான் உன்னை
விடக் காரணம் உண்டோ?’ என்கிறார்.
வள்ளலே - 2நிர்ஹேதுகமாக
உன்னை எனக்குத் தந்த பரம உதாரனே! மதுசூதனா - நீ உன்னைத் தருமிடத்தில் நான் ஏற்றுக்
கொள்ளாதபடி பண்ணும் விரோதிகளை,’ மதுவாகிற அசுரனை
_____________________________________________________________
1. ‘உன் வடிவழகை’ என்றது,
‘மரதக மலையே’ என்றதனை நோக்கி. ‘எள்கல்’ என்ற
பதத்தின் இரண்டாவது பொருளை நோக்கி
‘உருக்குலைந்த நான்’ என்கிறார். ‘எங்ஙனம்
விடுகேன்?’ என்றதனை நோக்கி, ‘விடக்காரணம் உண்டோ?’
என்கிறார்.
2. ஒரு காரணமுன்னாகக்
கொடுத்தால், அது ஒளதார்யமல்லாமையாலே, ‘நிர்ஹேதுகமாக’
என்கிறார். நிர்ஹேதுகம் - காரணம்
இல்லாமை
|