New Page 1
ஆறாந்திருவாய்மொழி - பா. 5 |
157 |
முதலிய நோய்கள் எல்லாவற்றையும்
ஓட்டி. உய்ந்து - 1‘கடவுள் உளன் என்று நினைத்தால் இவனும் உள்ளவன் ஆகின்றான்’
என்கிறபடியே உய்வு பெற்று. போந்து -சம்சாரிகளைக்காட்டிலும் வேறுபட்டவனாய். இருந்து - பாரம்
இல்லாதவனாய் இருந்து. ‘வள்ளலே! மதுசூதனா! உன்னை எங்ஙனம் விடுகேன்?’ என்க.
(4)
170
உய்ந்து போந்து என்உலப்பு
இலாதவெந் தீவினைகளை
நாசஞ் செய்துஉனது
அந்தம்இல் அடிமை
அடைந்தேன் விடுவேனோ?
ஐந்து பைந்தலை ஆடு
அரவணை மேவிப் பாற்கடல்
யோக நித்திரை
சிந்தை செய்த எந்தாய்!
உன்னைச் சிந்தை செய்துசெய்தே.
பொ-ரை :
‘திருப்பாற்கடலில் பசிய ஐந்து தலைகளையுடைய ஆடுகின்ற ஆதிசேஷ சயனத்தில் பொருந்தி யோக நித்திரையில்
காக்கும் வகையைச் சிந்தை செய்த என் சுவாமியே! உன்னை நினைத்து நினைத்து அதனால் உய்வு பெற்று,
உலக மக்களில் வேறுபட்டு, என்னுடைய அளவு இல்லாத கொடிய பாவங்களை அழித்து, உன்னுடைய முடிவு இல்லாத
நித்தியமான கைங்காரியத்திலே சேர்ந்துள்ள நான், இனி விடுவேனோ?’ என்கிறார்.
வி-கு :
‘சிந்தைசெய்து உய்ந்து போந்து நாசஞ்செய்து அடிமை அடைந்தேன்’ எனக் கூட்டுக. அடைந்தேன் -
வினையாலணையும் பெயர். ‘சிந்தைசெய்து, நாசஞ்செய்து’ என்பன ஒரு சொல் நீர்மைய. செய்து செய்து
-அடுக்கு. மேவிச்சிந்தை செய்த’ எனக் கூட்டுக. அந்தம்இல் அடிமை - நித்தியமான அடிமை.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 2‘ஆத்மாந்த தாஸ்யத்திலே அதிகரித்த நான் உன்னை விடப் பிரசங்கம்
உண்டோ?’ என்கிறார்.
உய்ந்து - நான்
உளேனாய்ப் போந்து - சம்சாரிகளில் வேறுபட்டவனாய்ப் போந்து. என் உலப்பு இலாத வெந்தீவினைகளை
நாசம் செய்து -என்னுடைய முடிவு இல்லாமல் இருக்கிற கொடிய பாவங்களை வாசனையோடே போக்கி. உன்
அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ-3உன் திருவடிகளிலே ஆத்மாந்த தாஸ்யத்திலே
_____________________________________________________________
1. உபநிடதம்.
2. ‘உனது அந்தமில் அடிமை
அடைந்தேன் விடுவேனோ?’ என்றதனை நோக்கி
அவதாரிகை அருளிச்செய்கிறார். ஆத்மாந்த தாஸ்யம்
- உயிர் உள்ள வரையிலும்
உள்ளதான கைங்கரியம்.
3. அடிமை செய்வது திருவடிகளிலே
ஆதலின், ‘உன் திருவடிகளிலே’ என்கிறார்.
|