அத
158 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
அதிகரித்த நான் இனி
விடக்காரணம் உண்டோ? 1வேறு விஷயங்களை விரும்பினேனோ விடுகைக்கு? சொரூபசித்தி
இல்லாமல் ஒழிந்து விடுகிறேனோ? தொண்டின் பரிமளத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ? எனக்குத்
தெவிட்டி விடுகிறேனோ? என்றபடி.
2ஐந்து
பைந்தலை ஆடு அரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய் - பெருவெள்ளத்துக்குப்
பல 3வாய்த்தலைகள் போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சிக்குப்
போக்கு வீடாகப் பல தலைகளை உடையவனாய், கட்குடியரைப் போலே ஆடுகின்றவனாய், 4சைத்திய
சௌகுமார்ய சௌகந்தியங்களை உடையனான திருவனந்தாழ்வான்மேலே, திருப்பாற்கடலிலே,
‘எல்லாப்பிராணிகளும் கரைமரம் சேர்ந்தாம் விரகு என்?’ என்று யோகநித்திரையில் திருவுள்ளம்
செய்த என் நாயன் ஆனவனே! யோகநித்திரை - 5‘பரமபுருஷன் வாசுதேவன் என்ற தன்னைச்
சிந்தித்துக் கொண்டு தனது மாயாரூபமான பிரகிருதி சம்பந்தம் இல்லாத யோக நித்திரையை அடைந்தார்’
என்கிறபடியே, தன்னை நினைத்தல். எந்தாய் - நீர்மையைக் காட்டி என்னை உனக்கே உரிமை ஆக்கினவனே!
‘உன்னைச் சிந்தை செய்து செய்து - நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து
விடக் காரணம் உண்டோ?’ என மேலே கூட்டுக.
(5)
171
உன்னைச் சிந்தை செய்து
செய்து உன் நெடுமா மொழி
இசைபாடி ஆடிஎன்
முன்னைத் தீவினைகள்
முழுவேர் அரிந்தனன்யான்
உன்னைச் சிந்தையினால்
இகழ்ந்த இரணியன்
அகன்மார்வம்
கீண்டஎன்
முன்னைக் கோள் அரியே!
முடியாதது என்எனக்கே?
____________________________________________________________
1. பாசுரத்திலுள்ள ‘உனது’,
‘உய்ந்து’, ‘அடிமை’, ‘அந்தம்இல்’ என்ற பதங்களை நோக்கி,
‘வேறு விஷயங்களை விரும்பினேனோ
விடுகைக்கு?’ என்பது முதலான நான்கு
வாக்கியங்களையும் அருளிச்செய்கிறார். சுவடு - ரசம்.
2. ‘பாடிமிழ் பரப்பகத்து
அரவணை அசைஇய
ஆடுகொள் நேமியான்’ என்பது
கலித்தொகை
(105)
3. வாய்த்தலை -
வாய்க்கால்கள்.
4. சைத்திய சௌகுமார்ய சௌகந்தியங்கள்
- குளிர்ச்சி மென்மை நறுநாற்றங்கள்.
5. ஸ்ரீவிஷ்ணு புரா. 6.4 :
6.
|