முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஆறாந்திருவாய்மொழி - பா. 6

159

    பொ-ரை : உன்னை மனத்தால் இகழ்ந்த இரணியனுடைய அகன்ற மார்வைப்பிளந்த, என்னுடைய முன்னை நரசிங்கமே! உன்னை நினைத்து நினைத்து உன்னுடைய பெருமை பொருந்திய திருவாய்மொழியைப் பெருமை பொருந்திய இசையோடு பாடி, அதற்குத் தக ஆடி, என்னுடைய பழமையான கொடிய பாவங்களை அடியோடு அழித்தேன் யான்; இனி, எனக்கு முடியாத காரியம் யாது உளது?

    வி-கு : ‘சிந்தைசெய்து பாடி ஆடி அரிந்தனன்’ எனக்கூட்டுக. ‘முன்னை’ என்பது, ‘அடியனான பிரஹ்லாதன் நினைவுக்கு முற்கோலினவன்’ என்னும் பொருளது. ‘என்’ என்பது, ‘எவன்’ என்னும் பொருளது. ‘என்’ என்பது, ‘எவன்’ என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது.

    ஈடு : ஆறாம் பாட்டு. 1‘அடியவன் சூளுறவு செய்த அக் காலத்திலே தோற்றுவான் ஒருவனான பின்பு எனக்குச் செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டோ?’ என்கிறார்.

    உன்னைச் சிந்தை செய்து செய்து - இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாமல் நினைத்து. உன்னை - இனியனுமாய் அடையத் தகுந்தவனுமான உன்னை. சிந்தை செய்து செய்து - 2‘தியானம் செய்யத் தக்கவன்’ என்கிற ஒரு விதியினாலே தூண்டப்பட்டவனாயல்லாமல், இனிமையாலே விடமாட்டாமல் எப்பொழுதும் நினைத்து. உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி - இயலும் இசையும் கரை காண ஒண்ணாதபடி இருக்கிற மொழியைப் பாடி, அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையால் ஆடி. ‘நெடு, மா’ என்ற இரண்டும், மொழிக்கும் இசைக்கும் அடைமொழிகள்; இயலின் பெருமையையும் இசையின் பெருமையையும் சொல்ல வந்தன. என் முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் - என்னுடைய பல காலமாக ஈட்டப்பட்ட கர்மங்களை வாசனையோடே போக்கினேன். முழு வேர்-வேர் முழுக்க. அதாவது, ‘பக்க வேரோடே’ என்றபடி. பாவங்களைப் போக்கினவன் இறைவன் ஆயினும், பலத்தை அடைந்தவர் தாம் ஆகையாலே ‘அரிந்தனன் யான்’ எனத் தம் தொழிலாகக் கூறுகிறார்.

    உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த - வார்த்தையோடு நில்லாது நெஞ்சினாலும் இகழ்ந்தவன். இத்தால், அவன் விடுவது, மனம் அறிந்தே தீவினைகளைச் செய்தவர்களை; கைக்கொள்ளுகைக்கு நட்புத்

____________________________________________________________

1. ‘என் முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே?’ என்றதனை நோக்கி
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. பிருகதாரண்ய உபநிடதம். 4 : 5.