New Page 1
16 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
கையை நோவு கண்டது என்று
இருக்கிறாள். ஊழிதோறு ஊழி - கல்பந்தோறும். காலம் மாறிக்கொண்டே வரவும் நோய் மாறாது
ஒரே தன்மையாகச் செல்லுகின்றதாதலின், ‘ஊழிதோறு ஊழி’ என்கிறாள். ‘சரீரத்தோடு
முடியும்படியான நோயினைக் கொண்டாயே என்பாள், ‘ஊழி உடலம் நோய் உற்றாயே’ என்கிறாள்.
(4)
115
ஊழிதோறு ஊழி உலகுக்கு
நீர்கொண்டு
தோழியரும்
யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே!
நீயும் மதுசூதன்
பாழிமையிற் பட்டு
அவன்கண் பாசத்தால் நைவாயே?
பொ - ரை :
உலகமெல்லாம்
நிரம்பவேண்டும் நீரைக்கொண்டு காலம் உள்ளதனையும் தண்ணீர் மயமாய் இற்று விழுகின்ற மேகமே!
தோழிகளையும் எம்மையும் போன்று, நீயும், மது என்னும் அரக்கனைக்கொன்ற இறைவனுடைய தோள் வலிமையில்
அகப்பட்டு அவன் பக்கல் வைத்த விருப்பத்தால் வருந்துகிறாயோ? அந்தோ! இத்துன்பம் நீங்கி
வாழ்ந்திடுக.
வி - கு :
உலகுக்கு-வேற்றுமை மயக்கம். ‘நெகிழ்கின்ற வானமே’ எனக் கூட்டுக.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப்புக்கது; ‘நீயும்
அவனுடைய பகைவர்களைக் கொல்லுகின்ற பண்பிலே அகப்பட்டாய் ஆகாதே?’என்கிறாள்.
‘ஊழிதோறு ஊழி நீராய்
நெகிழ்கின்ற வானமே’ என்க. உலகுக்கு நீர் கொண்டு - உலகம் அடங்க வெள்ளம் இடவேண்டும். படி
நீரை முகந்துகொண்டு. உனக்கு நல்ல 2நிதரிசனம் உண்டு. தோழியரும் யாமும் போல்-என்
இழவுக்கு 3எம்மின் முன் அவனுக்கு மாயும் தோழிமாரையும் என்னையும் போன்று. நீராய்
நெகிழ்கின்ற கரைந்து நீராய் விழுகிற. வானமே -மேகமே! வானம் - மேகம்; 4‘வான்
கலந்து வண்ணன்’ என்றார் பூதத்தார்; 5‘வானம் வழங்காது
_____________________________________________________________
1. “நீராய் நெகிழ்கின்ற
வானமே! மதுசூதன் பாழிமையிற்பட்டு” என்ற பதங்களைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச் செய்கிறார்.
2. நிதரிசனம் - எடுத்துக்காட்டு
3. ‘யாமுடைய துணையென்னும்
தோழிமாரும் எம்மின்முன் அவனுக்கு மாய்வராலோ’
திருவாய். 9. 9 : 5.
4. இரண்டாந்திருவந்.
75.
5. திருக்குறள், வான் சிறப்பு.
9.
|