தன
160 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
தன்மையே அமையும் என்றபடி.
இரணியன் அகன் மார்வம் கீண்ட - இரணியனுடைய அகன்ற மார்வைப் பிளந்த. வரபலம் தோள் பலம்
1ஊட்டியாக வளர்ந்த சரீரமானது 2திரு உகிருக்கு 3இரை
போராமையாலே, வருத்தம் இன்றிக் கிழித்துப் பொகட்டான் என்பார், ‘அகன் மார்வம் கீண்ட’
என்கிறார். என் முன்னைக் கோள் அரியே- 4நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று
இருக்கிறார்; அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று
பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார்
என்றபடி. கோளரி -‘மஹாவிஷ்ணும்’ என்கிற 5மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.
6‘ஜ்வலந்தம்’ என்கிற ஒளியையுடைய சிங்கம் என்னுதல். மூடியாதது என் எனக்கே - நீ
சூளுறவு செய்த அக்காலத்திலேயே தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?
(6)
172
முடியாதது என்எனக் கேல்இனி?
முழுஏழ் உலகும்
உண்டான் உகந்துவந்து
அடியேன் உட்புகுந்தான்
அகல்வானும் அல்லன்இனிச்
செடியார் நோய்கள்
எல்லாம் துரத்துஎமர் கீழ்மேல்
எழுபிறப்பும்
விடியா வெந்நரகத்து
என்றும் சேர்தல் மாறினரே.
பொ-ரை :
‘ஏழ் உலகங்கள் முழுதினையும் உண்டவன், விரும்பி வந்து அடியேன் மனத்திலே புகுந்தான்; இனி, நீங்குமவனும்
அல்லன்; கீழ் எழு பிறப்புகளிலும் மேல் எழு பிறப்புகளிலும் உள்ள என்னுடைய உறவினர், பாவங்கள்
காரணமாக வருகின்ற துன்பங்கள் எல்லாம் நீங்கி, ஒரு நாளும் விடியாத கொடிய நரகத்திலே சேர்தலை
எப்பொழுதும் நீங்கினர்; ஆதலால், எனக்கு முடியாதது என்?’ என்கிறார்.
___________________________________________________________
1. ஊட்டியாக - உணவாக.
2. திரு உகிர் - அழகிய நகம்.
3. இரை - இலட்சியம்.
4. ‘என் கோளரியே’ என்றதில்
‘என்’ என்பதில் நோக்கமாக ‘நரசிம்ஹமாய்’ என்று
தொடங்கும் வாக்கியத்தை அருளிச் செய்கிறார்.
5. மிடுக்காவது, சர்வலோக
வியாபன சக்தி.
6. ஜ்வலந்தம் -பிரகாசிப்பது.
‘மஹாவிஷ்ணும்’, ‘ஜ்வலந்தம்’ இவை, நரசிம்ஹ அநுஷ்டுப்பில்
உள்ளவை.
|