முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

173

ஆறாந்திருவாய்மொழி - பா. 8

163

173

        மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து
            உள்ளம் தேறி
        ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான்மூழ்கினன்
            பாறிப் பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறுஎழப்
        பாய்பறவைஒன்று
            ஏறி வீற்றிருந்தாய்! உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்!

    பொ-ரை : அசுரர்களுடைய பல கூட்டங்கள் நிலை கெட்டு ஓடவும், அவ்விடத்தில் புழுதி எழவும், பகைவர்கள் மேல் பாய்கின்ற ஒப்பற்ற கருடப்பறவையின் மேல் ஏறி வீற்றிருந்தவனே! மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து திருவடிகளை அடைந்து அதனால் உள்ளம் தெளிந்து முடிவு இல்லாத இன்பமாகிய பெரிய வெள்ளத்திலே யான் மூழ்கினன்; இனி, எந்தாய்! உன்னை என்னுள் நீக்கேல்.

    வி-கு : ‘மாறிப் பிறந்து அடைந்து தேறி மூழ்கினன்’ எனவும், ‘பாறி எழ ஏறி வீற்றிருந்தாய்’ எனவும் கூட்டுக. ‘மாறிமாறி, பாறிப்பாறி’ என்பன, அடுக்குத்தொடர்; மிகுதிப்பொருளைக் காட்ட வந்தன. பாறி - பாற. வீற்றிருத்தல் - வேறொன்றற்கு இல்லாத பெருமையோடு தங்கியிருத்தல்; வீறு - வேறொன்றற்கு இல்லாத பெருமை. நீக்கேல் - எதிர்மறை முற்று.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘இப்படி, கனத்த பேற்றுக்கு நீர் செய்த நல்வினை என்?’ என்ன, ‘ஒரு நல்வினையால் வந்தது அன்று, நான் பிறந்து படைத்தது’ என்கிறார். ‘அதுவும் ஒன்று உண்டு; அந்தாதியாகப் பிறந்து போந்தேன்’ என்கிறார்.

    மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து - ‘சம்பந்தி சம்பந்திகளோடு உம்மை ஏற்றுக்கொள்ளுவதற்கு நீர் செய்தது என்?’ என்ன, கடலுக்குள்ளே கிடந்த ஒரு துரும்பு திரைமேல் திரையாகத் தள்ள வந்து

____________________________________________________________

1. ‘பிறந்து’ என்றதனை நோக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘இப்படி, கனத்த
  பேற்றுக்கு’

  என்றது, ‘சம்பந்தி சம்பந்திகள் அளவும் சம்சார விச்சேத ரூப பலத்துக்கு’ என்றபடி.
  ‘நான் பிறந்து படைத்தது’ என்றது, நான் பிறவாநிற்கச் செய்தே பெற்றது. அதாவது,
  துர்க்கதியே பற்றாசாக அங்கீகரித்தான் என்றபடி. ‘ஜன்மசித்தம்’ என்பது
  தொனிப்பொருள். ‘மாறி மாறி’ என்றதனை நோக்கி அருளிச்செய்கிறார் ‘அதுவும் ஒன்று
  உண்டு’ என்று தொடங்கி. ‘அதுவும் ஒன்று உண்டு’ என்றது, ‘நல்வினை இல்லை
  எனலாகாது; நல்வினையும் உண்டு’ என்றபடி. நல்வினையாவது, அந்தாதியாகப் பிறக்கை.
  அந்தாதியாகப் பிறக்கையாவது, முன்னைய சரீரத்தினுடைய அந்தம் அடுத்த சரீரத்துக்கு
  ஆதியாகும்படி பிறத்தல். பின் வாக்கியத்தால் இறைவனுடைய நிர்வேஹதுகம் போதரும்.