New Page 1
ஆறாந்திருவாய்மொழி - பா. 9 |
165 |
வேண்டும். இனி, இதற்கு,
1‘என்னோடே இப்படிக் கலந்த உன்னை, உன்னுடைய கலவியால் வந்த ரசம் அறிந்த என்
பக்கல்நின்றும் நீக்க நினையாது ஒழிய வேண்டும்’ என்று கூறலுமாம். 2தம்முடைய இனிமையாலே
ஐயம் கொள்ளுகிறார். தம் உகப்பு அவனை எதிரிட்டபடி. எந்தாய் - விரோதியைப் போக்கிக்
கலக்கைக்கு அடியான சம்பந்தத்தைச் சொல்லுகிறார். எந்தாய் - என தமப்பன்.
(8)
174
எந்தாய்!தண் திருவேங்கடத்துள்
நின்றாய்! இலங்கை
செற்றாய்! மராமரம்
பைந்தாள்ஏழ் உருவஒரு
வாளி கோத்த வில்லா!
கொந்துஆர்தண் அம்துழாயினாய்!
அமுதே! உன்னை
என்னுள்ளே குழைந்தஎம்
மைந்தா! வான்ஏறே!
இனிஎங்குப் போகின்றதே?
பொ-ரை :
என் தமப்பனே, குளிர்ந்த திருவேங்கடத்தில் நிற்கின்றவனே, இலங்கையை அழித்தவனே, மராமரங்களினுடைய
பரந்த அடிப்பாகம் ஏழும் ஊடுரும்படி ஒப்பற்ற பாணத்தை விடுத்த வில்லையுடையவனே, குளிர்ந்த அழகிய
கொத்துகளையுடைய திருத்துழாய் மாலையை உடையவனே, அமுதம் போன்றவனே, உன்னை என்னுள்ளே கலந்த
இளமைப்பருவம் உடையவனே நித்தியசூரிகளுக்கு ஏறு போன்றவனே, இப்பொழுது இக்கலவியை விட்டு எங்கே
போகின்றாய்?
வி-கு :
வான் - இடவாகுபெயர். இனி - இப்பொழுது. ‘போகின்றதே!’ என்பது, போகாதே என்னும் பொருளது.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 3‘முதலிலே உன்னை அறியாது இருக்கிற என்னை, உன்னையும் உன் இனிமையையும்
அறிவித்து
___________________________________________________________
1. ‘ஈறிலின்பத்து
இருவெள்ளம் யான் மூழ்கினன்’ என்கையாலே ‘இந்த இன்பம் நமக்குத்
தொங்கப் புகுகிறதோ?’ என்று,
போக்யதாதிசயத்தில் அதிசங்கை தோன்றும் பாவமாக,
‘என்னோடே இப்படி’ என்று தொடங்கும்
வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.
2. முன்னும் பின்னும் ஈஸ்வரனுடைய
அதிசங்கையாயிருக்க, இப்பாசுரத்தில் ‘உன்னை
என்னுள் நீக்கேல்’ என்று கூறும்படி இவர் ஐயங்கொள்ளக்
காரணம் என்?’ என்னும்
வினாவிற்கு விடையாக, ‘தம்முடைய இனிமையாலே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
3. ‘அமுதே! உன்னை என்னுள்ளே
குழைத்த எம் மைந்தா! இனி எங்குப் போகின்றதே!’
என்ற பதங்களைக் கடாஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘உன்னை என்னுள்
நீக்கேல் எந்தாய்’ என்ற அது, சொல் அளவேயோ? மனத்திலுமுண்டோ?’
என்று
அறியவேண்டும் என்று ஈஸ்வரன் ஒர் அடி பெயர நின்றான்; அதனைக் கண்டு
சொல்லுகிறார்.
|