உன
166 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
உன்னால் அல்லது செல்லாதபடி ஆக்கின நீ, இனி என்னை விட்டுப்
போகாதொழிய வேண்டும்’ என்கிறார்.
எந்தாய்-சிரமத்தைப் போக்குகிற திருமலையிலே வந்து
நின்று உன்
1ஸ்வாமித்துவத்தைக் காட்டி என்னைச் சேஷத்துவத்திலே நிறுத்தினவனே!
இலங்கை செற்றாய் - பிராட்டியுடைய சேர்க்கைக்கு விரோதியாயிருந்தவனைப் போக்கியதுபோன்று
என்னுடைய சேஷத்துவ விரோதியைப் போக்கினவனே! மராமரம் பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த
வில்லா - பரந்த வடிவையுடையனவான மராமரங்கள் ஏழும் மறுபாடுருவும்படியாகப் பண்டே தொளையுள்ளது ஒன்றில்
ஒட்டியது போன்று, அம்பைக் கோத்த வில் வலியையுடையவனே! இதனால், அடியார்கள் திறத்தில்
மழுவேந்திக் கொடுத்துக் காரியம் செய்தமையைத் தெரிவித்தபடி. கொந்து ஆர் தண் அம்
துழாயினாய் -வைத்த வளையத்தோடே நின்று மராமரம் எய்தானாதலின், ‘கோத்த வில்லா’
என்றதனைச் சார்த்துத் ‘தண்அம் துழாயினாய்’ என்கிறார். ‘ஆயின், அவ்வவதாரத்தில்
துழாய் உண்டோ?’ எனின், அவதாரத்துக்குச் சேர ஏதாவது ஒன்றாலே வளையம் வைக்கிலும், திருத்துழாய்
அல்லது தோற்றாது இவர்க்கு. கொந்துஆர் - தழைத்திருக்கை. அமுதே - மராமரம் எய்கிற போது இலக்குக்
குறித்து நின்ற நிலை இவர்க்கு இனிதாய் இருந்தபடி.
உன்னை என்னுள் குழைத்த எம்மைந்தா - கலக்கிற
இடத்தில் ‘ஒரே பொருள்’ என்னலாம்படி கலந்து அதனால் வந்த புதுமையான யௌவனத்தை உடையவனே!
இதனால், ‘இனி, ‘போவேன்’ என்றால், போகப் போமோ? போகிலும், கூடப் போமித்தனை’ என்பதனைத்
தெரிவித்தபடி. வான் ஏறே - தன் இனிமையை நித்திய சூரிகளை அனுபவிப்பித்து, அதனாலே வந்த மேன்மை
தோன்ற இருக்குமாறு போன்று, இவரை அனுபவித்து மேன்மை தோன்ற இருக்கின்றபடி. இனி எங்குப்
போகின்றதே -‘உன்னால் அல்லது செல்லாதபடியான என்னை விட்டு உன்னை ஒழிய வாழ வல்லார் பக்கல்
போகவோ? நித்தியசூரிகளை விடிலன்றோ என்னை விடலாவது?’ என்கிறார். ‘இவர் நம்மை விடிற்செய்வது
என்?’ என்று இறைவனுக்கு உண்டான ஐயத்தைப் போக்குகிற இவ்விடத்தில், ‘நீ என்னை
____________________________________________________________
1. ஸ்வாமித்துவம் - இறைமைத்தன்மை. சேஷத்துவம் - அடிமைத் தன்மை.
|