வ
ஆறாந்திருவாய்மொழி - பா. 10 |
167 |
விட்டுப் போகாதே
கொள்’ என்னும் இதற்குக் கருத்து என் என்னில், 1விலக்ஷண விஷயம் தானும் காற்கட்டி,
எதிர்த்தலையையும் காற்கட்டப் பண்ணுமாயிற்று.
2எந்தாய்
- நீ சேஷி அல்லாமற் போகவோ? தண் திருவேங்கடத்துள் நின்றாய் - தூரஸ்தனாய்ப் போகவோ?
இலங்கை செற்றாய் - பகைவர்களை அழிக்கின்ற பண்பினன் அல்லாமற்போகவோ? மராமரம் பைந்தாள்
ஏழ்உருவ ஒரு வாளி கோத்த வில்லா - அடியார்கள் திறத்தில் சூளுறவு செய்து காரியம் செய்யுமவன்
அல்லாமற் போகவோ? கொந்து ஆர் தண் அம் துழாயினாய் - அடியார்களைக் காத்தற்கு மாலை இட்டிலன்
என்று போகவோ? உன்னை என்னுள் குழைத்த - ஒரு நீராகக் கலந்திலன் என்று போகவோ? எம் மைந்தா
- புதிய புதிய தன்மையன் அல்லன் என்று போகவோ? வான் ஏறே - மேன்மையன் அல்லன் என்று போகவோ?
இனி எங்குப் போகின்றதே - போகிலும் கூடப் போமித்தனை ஒழிய, ‘ஒரே பொருள்’ என்னலாம்படி
கலந்து தனித்துப் போகலாமோ? போகலாகாது என்றபடி.
(9)
175
போகின்ற காலங்கள்
போய காலங்கள் போகுகாலங்கள்
தாய்தந்தை உயிர்
ஆகின்றாய்! உன்னைநான்
அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல்புகழ்
மூவுலகுக்கும் நாதனே! பரமா!
தண்வேங்கடம்
மேகின்றாய்! தண்துழாய்
விரைநாறு கண்ணியனே!
பொ-ரை :
‘எங்கும் பரவுகின்ற பழமையான புகழையுடைய மூன்று உலகங்கட்கும் தலைவனே! குளிர்ந்த வேங்கடத்தில்
எழுந்தருளியிருப்பவனே! வாசனை வீசுகின்ற குளிர்ந்த துழாய் மாலையை
_____________________________________________________________
1. விலஷண விஷயம்
- உலகத்திற்கெல்லாம் வேறுபட்ட சிறப்பினையுடைய பொருள்.
தானும் காற்கட்டித் தன்னுடைய சிநேகத்தாலே
எதிர்த்தலையையும் போகாதபடி
காற்கட்டப் பண்ணும் என்றபடி. காற்கட்டுகை - ஐயம் கொள்ளுதல்.
2. ‘எங்குப்
போகின்றதே’ என்ற தொடரிலுள்ள ‘எங்கு’ என்ற பதத்திற்கு, இதுகாறும் தேச
பரமாக வியாக்யானம்
செய்து, இப்பொழுது, ஹேதுபரமாக வியாக்யானம் செய்கிறார்.
‘எந்தாய்’ என்று தொடங்கி. இனி,
மேற்கூறிய விசேஷணங்களை எல்லாம் போகாமைக்கு
உறுப்பு ஆக்குகிறார், ‘எந்தாய்’ என்று தொடங்கி’
எனலுமாம்.
|