வன
ஆறாந்திருவாய்மொழி - பா. 11 |
169 |
வனாயிருந்து வைத்து, என்னை
அடிமை கொள்ளுகைக்காக, சிரமத்தை நீக்குகிற திருமலையிலே வந்து அண்மையில் இருப்பவனே! உன்னை
நான் அடைந்தேன், விடுவேனோ?’ என மேலே கூட்டுக. 1தண்துழாய் விரை நாறு கண்ணியனே
- இவருடைய துன்பமெல்லாம் தீரும்படியாக வந்து அங்கீகரித்துத் தன்னை நுகர்வித்து, இவர் தன்னை
விடின் செய்வது என் என்ற ஐயமும் தீர்ந்து, தோளில் இட்ட மாலையும் வாசனை உள்ளதாய், பிடித்து
மோந்த இலைத் தொடைமாலையும் தானுமாய் நின்ற நிலையைத் தெரிவிக்கிறார்.
(10)
176
கண்ணித் தண்அம்
துழாய்முடிக் கமலத் தடம்பெருங்
கண்ண னைப்புகழ்
நண்ணித் தென்குரு கூர்ச்சட
கோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வுஇல்
அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர்பத்து இசையொடும்
பண்ணில் பாடவல்
லார்அவர் கேசவன் தமரே!
பொ-ரை :
குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையையுடைய திருமுடியினையும் தாமரை போன்ற விசாலமான பெரிய கண்களையுமுடைய
இறைவனது நற்குணங்களிலே தாம் ஈடுபட்டு. அழகிய திருக்குருகூரில் அவதரித்த மாறனாகிய ஸ்ரீ சடகோபர்
அருளிச்செய்த எண்ணத்தில் தப்பாத அந்தாதியாக அமைந்த ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துப்
பாசுரங்களையும் இசையோடும் பண்ணோடும் பாடுவதற்கு வல்லார் எவர்? அவர் கேசவன் தமர் ஆவர்.
வி-கு :
கண்ணனை - வேற்றுமை மயக்கம். ‘சடகோபன், மாறன்’ என்பன இரண்டும், ஆழ்வாருடைய திருப்பெயர்கள்.
‘இசையொடும் பண்ணில்’ என்று அருளிச்செய்வதால் இசை வேறு, பண் வேறு என அறியலாம். இவ்விரண்டன்
வேறுபாட்டினை வியாக்கியானத்திற் காண்க.
_____________________________________________________________
1. ‘தாய் தந்தை உயிர்
ஆகின்றாய், உன்னை நான் விடுவேனோ?’ என்று அருளிச்செய்தார்;
கேட்ட சர்வேஸ்வரன் பரிபூர்ண
மனோரதனாய, தோளில் மாலையும் பரிமளிதமாய்,
இலைத்தொடை மாலையோடு மோந்து கொண்டிருக்கும்
இருப்பை அனுபவிக்கிறார்
‘தண்டுழாய் விரை நாறு கண்ணியனே’ என்று. இலைத்தொடை - பூப்பந்து.
|