முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

என

முதல் திருவாய்மொழி - பா. 6

17

எனின் என்றார் திருவள்ளுவர். வாழிய - உலகத்தாற்கு உபகாரமாய் இருக்கிற நீ, உன்னுடைய கண்ணநீர் நீங்கி வாழ்ந்திடுக. இனி, ‘நீராய் நெகிழ்கின்ற வானமே’ என்பதற்கு, ‘மிக்க சூக்ஷ்மமான ஆகாயமானது நீரை முகந்துகொண்டு சிதறி உருகி நீராய் விழுகிற வானமே!’ என்று கூறலுமாம். வானம் - ஆகாயம்.

    நீயும் - உலகத்திற்கு உபகாரகமாக வடிவு படைத்த நீயும். மதுசூதன் பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே - பகைவர்களை அழிக்கும் பண்பினனானவனுடைய வீர குணத்திலே அகப்பட்டு, அவன் பக்கல் உண்டான விருப்பத்தாலே பிழைக்கவும் மாட்டாமல், நோவுபடுகிறாய் ஆகாதே? பாழிமை - வலிமை, இடமுடைமை என்றுமாம். உலகத்தில் பொருள்களுக்குத் தகுதியாகவே நசையும் இருக்கும்; எவ்வளவு நசை உண்டு, மறுதலையில் அவ்வளவும் நைவும் உண்டாம்; ஆதலின், ‘மதுசூதன்கண் பாசத்தால் நைவாயே’ என்கிறாள். ‘நைவாயே’ என்ற ஏகாரத்தால் ‘நைவே பலம்’ என்றபடி.  

(5)

116

        நைவாய எம்மேபோல் நாண்மதியே! நீஇந்நாள்
        மைவான் இருள்அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
        ஐவாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார்
        மெய்வா சகம்கேட்டுஉன் மெய்ந்நீர்மை தோற்றாயே?

    பொ - ரை : ‘ஒரு கலையோடு கூடியிருக்கின்ற சந்திரனே! வருந்து தலையுடைய எம்மைப் போன்று, இக்காலத்தில் நீ ஆகாயத்திலிருக்கின்ற மிகக் கரிய இருளினைப் போக்குகின்றாய் இல்லை; ஒளியெல்லாம் மழுங்கி அழிகின்றாய்; ஆதலால், ஐந்து வாயினையுடைய பாம்பாகிய படுக்கையின்மேல் தங்கியிருக்கின்ற - சக்கரத்தைத் தரித்த - இறைவனுடைய பொய் வார்த்தையைக் கேட்டு, உன் சரீரத்திலுள்ள ஒளியை இழந்தாயோ?’ என்கிறாள்.

    வி - கு : அகற்றாய் - முற்று; எச்சமுமாம். மாழாந்து - ஒளி மழுங்கி. தேம்புதல் - கெடுதல். ‘புட்டேம்பப் புயன்மாறி’ (பட்டினப்பாலை, 4.) என்றார் பிறரும். கற்கறித்து, ‘நன்கட்டாய்’ என்புழிப் போன்று, ஈண்டு ‘மெய் வாசகம்’ என்பது குறிப்பு மொழி. ‘எம்மேபோல் மாழாந்து தேம்புதி’ எனக் கூட்டுக.