177
ஏழாந்திருவாய்மொழி - பா. 1 |
175 |
177
கேச வன்தமர் கீழ்மேல்
எமர்ஏழ் எழுபிறப்பும்
மாசதிர் இதுபெற்று
நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன்என் கருமாணிக்கம்
என்செங்கோலக் கண்ணன்
விண்ணோர்
நாயகன் எம்பிரான்
எம்மான் நார யணனாலே.
பொ-ரை :
‘எனக்குப் சுவாமியாய், எனக்கு நீலரத்தினம் போன்ற வடிவையுடையவனாய், சிவந்த அழகிய கண்களையுடையவனாய்,
நித்திய சூரிகட்குத் தலைவனாய், எனக்கு உதவியைச் செய்தவனாய், எனக்குத் தலைவனாய் இருக்கிற
என்னுடைய நாராயணனால் என்னைச் சேர்ந்தவர்கள் கீழும் மேலும் உள்ள ஏழ் ஏழ் பிறப்புகளிலும்
இறைவனுக்குத் தமர் ஆனார்கள்; இந்தப் பெரிய சிறப்பைப் பெற்று நம்முடைய வாழ்வு வளர்கிறபடி
என்னே!’ என்கிறார்.
வி - கு :
மேல், ‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்று
சுருங்கக் கூறியவதனை இத் திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார். ‘வாய்க்கின்றவாறு’
என்பது, ‘வாய்க்கின்றவா’ என விகாரப்பட்டது. ‘எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்,
பண்புடை மக்கட் பெறின்’ என்ற திருக்குறளை இப்பாசுரத்தோடு ஒப்பு நோக்குக.
ஈடு :
முதற்பாட்டு. சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம் பெருமான் பேரன்பு கொண்டவனானபடியைக் கண்டு,
‘இவை எல்லாம், என்பக்கல் உண்டான அங்கீகாரத்தின் மேம்பாடே அன்றோ?’ என்று மகிழ்ந்தவர்
ஆகிறார்.
கேசவன் தமர் -
பிரசஸ்தகேசனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள். என்றது, அவனுடைய அவயவங்களின் அழகிலே தோற்றிருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றபடி. அன்றிக்கே, பகைவர்களை அழிக்கும் பண்பிலே தோற்றிருக்குமவர்கள்
என்னுதல்; அன்றிக்கே, 1‘க என்பது பிரமனுடைய பெயர்; நான் எல்லாப்
பொருளையும் நியமிக்கிற சிவன் ஆகின்றேன்; நாங்கள் இருவரும் தேவரீர் திருமேனியில் உண்டானோம்.
ஆதலால், ‘கேசவன்’
_____________________________________________________________
1. கேசவன் என்பதற்கு மூன்று
பொருள் அருளிச்செய்கிறார்; கேசத்தை யுடையவன்; கேசம்
- மயிர் முடி. ‘கேசி’ என்னும்
அசுரனைக் கொன்றவன் கேசவன்; பிரமனையும்
சிவனையும் தன் திருமேனியிலே வைத்திருப்பவன் கேசவன்.
பிரசஸ்தகேசன் - நீண்ட
மயிர் முடியை உடையவன்.
|