முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஆன

ஏழாந்திருவாய்மொழி - பா. 1

177

ஆனால் தம்முடைய வாழ்வு ஆயினவாறு யாங்ஙனம்?’ எனின், தம்மோடு சம்பந்தம் உடையாரையும் இறைவன் இப்படி அங்கீகரித்தது தம்முடைய வாழ்வே அன்றோ? வாய்க்கின்றவா - ஊற்று மாறாதே மேன்மேலெனப் பெருகி வருகிறபடி ஆக, ஏழ்படிகால் என்றதுதான் ஓர் அளவு இல்லை; இன்று நம் அளவும் வரச் செல்லுகிறதே அன்றோ? ‘இப்படி, அங்கீகரிப்பதற்குக் காரணம் என்?’ என்னில், ஈசன் - வகுத்த ஸ்வாமி ஆகையாலே. என் கரு மாணிக்கம் என் செம் கோலம் கண்ணன் கண் அழகாலே என்னைத் தனக்கே உரியவன் ஆக்கி, தன் வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன். விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் - நித்தியசூரிகளைத் தோற்பிக்குமாறு போன்று என்னை வடிவழகைக் காட்டித் தோற்பித்து, என்னை அவ்வடிவழகை அனுபவிப்பித்த உபகாரகன். நாராயணனாலே -தன் மேன்மையைப் பாராமல் உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே. 1சமிதை பாதி சாவித்திரி பாதியாக அன்றி, அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலேயே என்பார் ‘நாராயணனாலே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறார். 2நாராயணனாலே என்ற இடம், மாசதிரினுடைய உபபாதனம்.

_____________________________________________________________

1. ‘சமிதை பாதி சாவித்திரி பாதியாக’ என்றது, உபாகர்மாவின் பிற்றை நாள்
  பிரஹ்மசாரிகள் காயத்திரி மந்திரத்தை ஆயிரத்தெட்டுத் தடவை சொல்லி
  ஆயிரத்தெட்டுச்சமித்துகளை நெருப்பில் ஓமம் செய்தல். சமிதை - சமித்து; பலாச
  மரத்தின் சுள்ளிகள். சாவித்திரி - காயத்திரி மந்திரம்.

2. ‘மா சதிர்’ என்பதற்கு அருளிச்செய்த உபாய உபேய பரமான நிர்வாஹங்கள்
  இரண்டற்கும் சாதாரணமான யோஜனையை அருளிச்செய்கிறார் ‘நாராயணனாலே’ என்று
  தொடங்கி, ‘நாராயணனாலே’ என்ற இது, ‘ஈசன் என் கருமாணிக்கம்’ முதலிய
  திருப்பெயர்களுக்கும் உபலக்ஷணம். ‘’மா சதிர்’ என்றது, உபாய பரமான பக்ஷத்தில்,
  ‘நாராயணனாலே’ என்றது, கூறியது கூறல் ஆகாதோ?’ எனின், ஆகாது. நாராயணனாலே
  என்ற இடம் மா சதிரினுடைய உபபாதனம் என்கிறார்; அதாவது, நாராயண சப்தத்துக்கு
  அன்மொழித் தொகைப் பொருளில் வாத்சல்யம் சொல்லுகையாலே, ‘மாசதிர்’ என்பது,
  பகவத் கிருபையைச் சொல்லுமிடத்தில் மாசதிருக்கு நாதராயணபதம் உபபாதமாயிருக்கும்
  என்றபடி. உபபாதனம - விரிவு. இப்பொருளில் நாராயணனாலே என்னும் மூன்றாம்
  வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொள்க. ‘நாாயணனாகிற மாசதிரைப் பெற்று
  என்பது பொருள். ‘ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
  நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணன் ஆகிற மாசதிரைப் பெற்றுக் கீழ்மேல் ஏழேழு
  பிறப்பில் எமர் கேசவன் தமரானார்கள்; நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா!’ என்று
  கூட்டிப் பொருள் காண்க. ‘மாசதிர்’ என்பது, உபேயபரமான பக்ஷத்தில், ‘ஈசன் என்
  கருமாணிக்கம்  - நாராயணனாலே கீழ்மேல் ஏழெழு பிறப்பில் எமர் கேசவன் தமர்
  ஆனார்கள்; மா சதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா!’ என்று கூட்டிப்
  பொருள் காண்க.