New Page 1
178 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
‘நாராயணனாலே எமர்
கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும் கேசவன் தமரானார்கள்; மா திர் இது பெற்று நம்முடை வாழ்வு
வாய்க்கின்றவா!’ எனக் கூட்டி முடிக்க.
(1)
178
நாரணன், முழுஏழ் உலகுக்கும்
நாதன், வேதமயன்,
காரணம் கிரிசை
கருமம்இவை முதல்வன், எந்தை
சீரணங்கு அமரர் பிறர்பலரும்
தொழுதுஏத்த நின்று
வாரணத்தை மருப்புஒசித்த
பிரான்என் மாதவனே.
பொ-ரை :
‘நாராயணனும், எழுவகைப்பட்ட எல்லா உலகங்கட்கும் தலைவனும், வேத உருவனும், காரணம் காரியம்
அவற்றின் பலம் ஆகிய இவற்றிற்கு முதல்வனும், மிக்க புகழையும் தெய்வத்தன்மையையுமுடைய நித்தியசூரிகளும்
மற்றையோரும் தொழுது ஏத்தும்படி நின்று குவலயாபீடம் என்னும் யானையினது கொம்பை முரித்த உபகாரகனுமான
திருமால் எனக்குத் தந்தையாவான்,’ என்றவாறு.
வி-கு :
கிரிசை - கிரியை. ‘முழு ஏழ் உலகுக்கும் நாதனாய், வேதமயனாய், காரணம் கிரிசை கருமம் இவற்றுக்கு
முதல்வனாய், சீரணங்கு அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பு ஒசித்த பிரானாய்
என் மாதவனான நாரணன் - எந்தை’ எனக் கூட்டுக.
ஈடு :
இரண்டாம் பாட்டு. 1நாராயணனாலே’ என்று
நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்று அன்றே? அதற்குப் பொருள் அருளிச்செய்வதாக அத்திருப்பெயரை
உபாதானம் பண்ணுகிறார்.
நாரணன் -
‘இதற்குப் பொருள் என்?’ என்னில், முழு ஏழ் உலகுக்கும் நாதன் -சர்வ ஸ்வாமி. ‘இவ்வர்த்தத்தில்
பிரமாணம் என்?’ என்னில், வேத மயன் -‘நாராயண பரப்பிரஹ்ம’ என்று இது போன்று பிரமாணங்களால்
‘சர்வ ஸ்வாமி’ என்று ஓதப்படுகிறவன். காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் - தன்
_____________________________________________________________
1. மேற்பாசுரத்தில்
பிரஸ்துதமான நாராயண சப்தத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார்
என்று பாசுரத்துக்குக் சங்கதி
கண்டு கொள்வது. ‘ஆயின், பொருள் மாத்திரம் கூற
அமையாதோ? சப்த உபாதானம் எதற்கு?’ என்னும்
வினாவிற்கு விடை, ‘நாராயணனாலே’
என்று தொடங்கும் வாக்கியம். இங்கு, முதற்பத்து இரண்டாந் திருவாய்மொழி’
எண்
பெருக்கு அந்நலத்து’ என்ற பத்தாம் பாசுரத்தின் அவதாரிகையை நினைவு கூர்க.
பிரஸ்துதம் -
சொல்லும்படி நேர்படல். உபாதானம் - எடுத்துக்கொள்ளுதல்.
|