ஈ
|
18 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
ஈடு :
ஆறாம் பாட்டு. 1மேகத்தினருகே ஒரு கலையையுடைய சந்திரன் தோன்றினான்; அவனைப்
பார்த்து, உன் வடிவில் எழில் இழந்தாய் ஆகாதே?’ என்கிறாள்.
நைவாய எம்மே
போல் -நைவையுடைய எங்களைப் போன்று. இனி, ‘நைவு தான் ஒரு வடிவு கொண்டாற்போன்று இருக்கின்ற
எங்களைப் போன்று’ என்று கூறலுமாம்; 2‘பூமியினின்றும் தோன்றினவளைப்
போன்றிருந்தவளும், அதனை அழித்து அலங்காரம் செய்கின்றவர்கள் இன்மையின் ஒப்பனை அழிந்திருந்தவளும்,
பெருமாள் வரினும் 3‘இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது’ என்னும்படி முதலிலே தாமரை
குடி போன பொய்கை போன்றிருந்தவளும் போய்த் தேய்ந்தற்ற படிக்கும் பசலைக்கும் நிதரிசனமாகச்
சொல்லும்படி இருந்தவளும், ‘நற்சரக்குக்கு வந்த அழுக்கு’ என்று தோற்ற இருந்தவளும், 4அம்பு
வாய் உள்ளே கிடக்கப் புறம்பே சமாதானம் பண்ணினாற்போலே ‘அகவாயில் இழவு பெரிது’ என்று தோற்ற
இருந்தவளும், 5பெருங்காற்றால் சிதற அடியுண்ட மேகதுண்டங்கள் போல இருந்தவளும், ஆன
சீதை’ என்றார் வால்மீகி பகவானும். நாள் மதியே
கலைகள்
நிறைந்த சந்திரனே!
6முன்னர்க் கலைகள் நிறைந்திருத்தலைக் கண்டிருந்தவள் ஆதலின்,
‘நாள் மதியே’ என்கிறாள். இனி, ‘நாட்பூ’ என்னுமாறு போன்று, ‘இளமதியே!’ என்று பொருள்
கூறலுமாம். நீ - காட்சிக்கு இனியனான நீ. இந்நாள் - இக்காலம். மை வான் இருள் அகற்றாய் -
ஆகாயத்தில் கறுத்த இருளைப் போக்க மாட்டுகின்றிலை’ என்று பொருள் கூறலுமாம். வான் - சிலேடை:
ஆகாயமும், வலிமையும்.
____________________________________________________________
1. மேல் பாசுரத்தில் மேகத்தைக்
கூறினாள்; இப்பாசுரத்தில் சந்திரனைக் கூறுகிறாள்;
‘காரணம் என்னை?’ என்னும் வினாவிற்கு விடையாக
‘மேகத்தினருகே’ என்று
தொடங்குகிறார். ஒரு கலைச் சந்திரன் - பிரதமையில் சந்திரன்.
2. ஸ்ரீராமா. சுந். 15 :
22.
3. ஆஸ்ரயம் - உருவம்
4. அம்பு வாய் - அம்பு
பட்ட புண்.
5. பெருமாளுடைய திருமேனியிற்
பிரிக்கப்பட்ட ஏகதேசம் என்று தோற்ற இருந்தாள்
என்றபடி.
6. ‘ஈண்டுக் கலைகள் நிறைந்த
சந்திரன் எனின், பின்னர் ‘மாழாந்து தேம்புதியால்’
என்றதனோடு முரணாகாதோ?’ என்னும்
வினாவிற்கு விடையாக ‘முன்னர்’ என்று
தொடங்கும் வாக்கியத்தை அருளிச் செய்கிறார்.
|