179
180 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
179
மாதவன் என்றதே
கொண்டு, என் னைஇனி
இப்பால்
பட்டது
யாதவங்களும் சேர்கொடேன்
என்றுஎன்னுள்
புகுந்துஇருந்து
தீதுஅவம் கெடுக்கும்
அமுதம்;
செந்தாமரைக்கண்
குன்றம்;
கோதுஅவம் இல்என்கன்னற்
கட்டி
எம்மான்என் கோவிந்தனே.
பொ-ரை :
‘எம்மானாகிய என்னுடைய கோவிந்தன், நான் மாதவன் என்று வாயினாற்சொன்ன அளவையே கொண்டு,
என் விஷயத்தில் இனிமேல் உள்ள காலமெல்லாம் எத்தகைய தீங்குகளும் சேரச் செய்யேன் என்று
உறுதிகொண்டு என்னுள்ளே புகுந்திருந்து, தீங்குகளையும் அவங்களையும் போக்கியருள்கின்ற அமிருதம்
போன்றவன்; செந்தாமரை போன்ற திருக்கண்களையும் மலைபோன்ற திருமேனியையும் உடையவன்;
கோதும் அவமும் இல்லாத கன்னற்கட்டி போன்று எனக்கு இனியவன்,’ என்பதாம்.
வி-கு :
‘என் கோவிந்தன் எம்மான் மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால்பட்டது யாதவங்களும் சேர்கொடேன்
என்று என்னுள் புகுந்து தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக்கண் குன்றம்; கோது அவம் இல்
என் கன்னற்கட்டி’ எனக் கூட்டுக.
ஈடு :
1‘மேல்
‘மா சதிர் இது பெற்று’ என்றார்; ‘இந்நன்மைக்கு அடி என்?’ என்ன, ‘நினைவு இன்றியே அந்தப்புரவாசிகள்
சொல்லும் வார்த்தையைச் சொன்னேன்’ என்கிறார். ‘பிராட்டியே! அழகிய மணவாளன் உன்னுடைய நாயகன்
என்ற சம்பந்தத்தைக் கொண்டே அவனைத் தரிசிக்கின்றோம்; கிட்டுகின்றோம்; அவனுக்குத் தொண்டுகளைச்
செய்கின்றோம்; அத்தொண்டினால் அவனுக்கு விளைகிற பிரீதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகின்றோம்’
என்று அருளிச்செய்தார் அன்றே பட்டர்?
மாதவன் என்றதே
கொண்டு - நான் ‘மாதவன்’ என்று கூறிய சொல்மாத்திரத்தையே கொண்டு; ‘அல்லாத திருநாமங்
_____________________________________________________________
1. இரண்டாம் பாசுரம்
பிராசங்கிகமாகையாலே முதற்பாசுரத்தோடே சங்கதி. அந்தப்புர
வாசிகள்
சொல்லும் வார்த்தை, ‘மாதவன்’
என்பது. ‘அந்தப்புர வாசிகள் அப்படிச் சொல்லுவாரோ?’
என்னும் வினாவிற்கு விடை, ‘பிராட்டியே!’
என்று தொடங்கும் பொருளையுடைய
சுலோகம். இது, குணரத்நகோசம் 52-ஆம் சுலோகம். பிராசங்கிகம்
- இடைப்பிற வரல்.
|