களுக
ஏழாந்திருவாய்மொழி - பா. 3 |
181 |
களுக்கும் இதற்கும் வாசி
அறிவதே!’ என்று இதனையே குவாலாகக் கொண்டான் ஆதலின், ‘மாதவன் என்றதே கொண்டு’ என்கிறார்.
என்னை - மற்றைத் திருப்பெயர்கட்கும் இதற்கும் வாசி அறியாத என்னை. இனி - முன்பு கழிந்த காலம்
கழிந்துவிட்டது அன்றோ? இதனால், மேலுள்ள காலம் மிகச் சிறிய காலமாகத் தோன்றாநின்ற தாயிற்று
ஈஸ்வரனுக்கு! 1‘பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன், அரவணைமேல் கண்டு தொழுதேன்’
என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருப்பைத் தான் என்பக்கலிலே கொண்டுள்ளான் என்கிறார்.
‘சுக்கிரீவன் சொன்ன தவணைக்காலம் கடந்துவிட்டது என்று கருதி மூர்ச்சித்தார்’ என்கிறபடியே,
இராநின்றான் என்றபடி. இப்பாற்பட்டது - அணைக்குக் கிழக்குப்பட்ட நீரைப் போன்றது அன்றோ
கழிந்த காலம்? ஆதலால், இனி மேல் உள்ள காலமாகிலும், யாதவங்களும் சேர் கொடேன் என்று -‘உன்னை
யாதொரு தவத்திலும் புக்குக் கிலேசப்படும்படி விடேன்’ என்று. இறைவனை விட்டு வேறு உபாயங்களைப்
பற்றுதல் 2அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும் ஆதலின், ‘யாதவங்களும் சேர்கொடேன்
என்று’ என்கிறார்.
இனி, ‘யாதவங்களும்’
என்பதனை, யாது அவங்களும் எனப் பிரித்து, நரகத்திற்குக் காரணமான அவித்யை முதலியவைகள் என்று
பொருள் கூறலுமாம். புறம்பே, சில பிரயோஜனங்களைக் கொண்டு போகவிடுதல், ‘தாழ்ந்தவன்’ என்று
நினைத்து அகலும்படி விடுதல், வேறு உபாயங்களை மேற்கொள்ளச் செய்தல் முதலியனவாக அவங்கள் பல
வகைப்படுதலின், ‘யாது அவங்களும்’ என்கிறார். என்று- 3‘இது எனக்கு விரதம்’
என்கிறபடியே அறுதியிட்டு. என்னுள் புகுந்து - இப்படி அறுதியிட்டு நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றி
என் மனத்திலே வந்து புகுந்து. இருந்து -‘புகுந்தாலும்
_____________________________________________________________
1. 'மேலுள்ள காலம் மிகச்
சிறிய காலமாகத் தோன்ற துக்கிப்பவன் சேதனன்
அன்றோ?’ என்ன, ‘பழுதே
பலபகலும்’ என்று தொடங்கி, அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘பழுதே பல பகலும்’ என்னும்
பாசுரம், முதல் திருவந்தாதி. 16.
‘இறைவன் அப்படியிருந்த இடமுண்டோ?’ என்ன, அதற்கு விடை.
‘சொன்ன
தவணைக்காலம் கடந்துவிட்டது என்று மூர்ச்சித்தார்’ என்பது. இப்பொருளையுடைய
சுலோகம்,
ஸ்ரீராமா. கிஷ்கிந். 30 : 3.
2. “அம்மி துணையாக ஆறுஇழிந்த
வாறுஒக்கும்,
கொம்மை முலைபகர்வார்
கொண்டாட்டம்”
(நல்வழி, 10)
3. ஸ்ரீராமா. யுத். 18 : 33.
|