New Page 1
ஏழாந்திருவாய்மொழி - பா. 4 |
183 |
செந்தாமரைக்கண்
குன்றம் - வாக்கு இத்திரியத்திற்கே அன்றிக் கண்ணுக்கும் இனியனாய் இருக்கை. இத்தலையில் தீதும்
அவமும் போக்கினானாய் இருக்கை அன்றியே, 1‘தனக்கு உண்டாய்க் கழிந்தது’ என்று தோன்றும்படி
வடிவில் பிறந்த பேரொளியோடு விளங்குகிறான் ஆதலின், செந்தாமரைக் கண் குன்றம்’ என்கிறார்.
2‘மனிதர்கட்குத் துன்பம் வரும் காலத்தில் அவர்கள் படும் துன்பத்தைக் காட்டிலும்
பல மடங்கு அதிகமான துன்பத்தைத் தான் அடைகின்றான்’ என்கிறபடியே இருக்குமவனன்றோ இறைவன்?
கோது அவம் இல் என் கன்னல் கட்டி - கோதாவது, வேறு பொருள்களின் சேர்க்கையால் வருமது. அவமுமாவது,
பாகத்தாலே வருமது. 3தார்ஷ்டாந்திகத்தில், கோதும் அவமாவது, அருளால் ஆதல்,
இவனுக்கு உபகாரகமாக ஆதல் அங்கீகரிக்கை. ஆக, தனக்குப் புறம்பாய் இருப்பது ஒரு இனிய பொருள்
இல்லாதபடி தான் இனியனாய் இருப்பான் என்றபடி. எம்மான் -‘நான் வேறொன்று போக்யம்’ என்று
இராதபடி என்னைத் தோற்பித்தவன். என் கோவிந்தனே - கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று
இருக்கிறார் ஆதலின், ‘என் கோவிந்தன்’ என்கிறார். 4‘ஆட்கொள்ளத் தோன்றிய
ஆயர்தம் கோ’ அன்றோ அவன்?
(3)
180
கோவிந்தன் குடக்கூத்தன்
கோவலன்
என்றுஎன்றே குனித்துத்
தேவும் தன்னையும்
பாடிஆடத் திருத்தி
என்னைக் கொண்டு,என்
பாவம் தன்னையும் பாறக்
கைத்துஎமர்
ஏழ்எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான்:
வல்லன்
எம்பிரான் விட்டுவே.
பொ-ரை :
‘எம்பிரானாகிய விஷ்ணு, எனக்குச் செய்த உதவி யாது?’ எனில் ‘கோவிந்தா! கோபாலா! குடக்கூத்தா!’
என்று சொல்லிக் கூத்தாடி மேன்மையினையும் தானான தன்மையாகிய எளிமையினையும்
_____________________________________________________________
1. இங்கு, ‘துயரறு
சுடரடி தொழுதெழுஎன் மனனே’ என்ற இடத்துத் ‘துயரறு’ என்றதற்கு
எழுதியுள்ள வியாக்கியானத்தை நினைவு
கூர்க.
2. ஸ்ரீராமா. அயோத்.
2 : 42.
3. தார்ஷ்டாந்திகம் -உபமேயம்.
4. பெரியாழ்வார் திருமொழி,
1. 6 : 11.
|