புகழ
184 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
புகழ்ந்து பாடி ஆடும்படி திருவருள்
புரிந்து, என்னை அடிமையும் கொண்டு, என் பாவங்களையும் சிதறும்படி ஓட்டி, என்னைச் சேர்ந்தவர்கள்
ஏழ் ஏழ் பிறப்பும் தன்னை அடையும்படியான தன்மை உடையோமாம்படி செய்தான்; ஆதலால், ஆற்றல்
உடையோன்’ என்பதாம்.
வி-கு :
கோவலன் - இது ‘கோபாலன் என்ற சொல்லின் சிதைவு’ என்பர் சிலப்பதிகார உரையாசிரியர். தே
-தெய்வத்தன்மை; மேன்மை. பாறுதல் - சிதறுதல். கைத்தல் - வெறுத்தல். தன்மையம் - படர்க்கையைத்
தழுவிய உளப்பாட்டுத் தன்மைப்பன்மை. ‘குளித்துப் பாடி ஆடத் திருத்திக்கொண்டு பாறக் கைத்து
ஆக்கினான்’ என முடிக்க, வல்லன்-குறிப்பு வினைமுற்று.
ஈடு :
நாலாம் பாட்டு. 1‘என்னோடு பரம்பரையாகச் சம்பந்தமுடையாரையும் என்னைப்போலே
ஆக்கினான் ஒருவனுடைய ஆற்றல் இருக்கும்படி என்னே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
கோவிந்தன் - ஸ்ரீ
வைகுண்டத்தில் இல்லாதது ஒரு செல்வம் இது. நிறைந்த பசுக்களால் உண்டான செல்வம் உள்ளது இங்கேயே
அன்றோ? குடக்கூத்தன்- பிராஹ்மணர் செல்வம் மிகுந்தால் யாகங்கள் செய்யுமாறு போன்று, ஆயர்கள்
செல்வம் மிகுந்தால் செருக்குக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று குடக்கூத்தாவது. 2‘எல்லாம்
நிறைந்தவனாதலின், ஒன்றிலும் விருப்பம் இல்லாதவன்; ஆதலால், மௌனமாக இருக்கிறான்,’ என்கிறபடியே,
இருக்கக் கூடிய பொருள், 3தைரிய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச்சாவி வெட்டி
ஆடினபடி இது. கோவலன்-இவற்றுக்கு அடியான பிறப்பை உடையவன்; ‘பிறந்து படைத்த ஐஸ்வர்யம் அன்றோ
இது?’ என்று என்றே குனித்து - இக்குணங்களை மாறாதே சொல்லாநின்று கொண்டு உடம்பு இருந்த இடத்தில்
இராமல் ஆடி. அவன் அடியார்கட்குப் பரதநதிரப்பட்டு இருக்கும் தன்மையை நினைத்தால் இவர்க்குப்
பேசாது இருக்க ஒண்ணாது ஆதலின், ‘என்று என்றே குனித்து ஆடி’ என்கிறார்.
_____________________________________________________________
1. ‘எமர் ஏழெழு பிறப்பும்
மேவும் தன்மையமாக்கினான் வல்லன் எம்பிரான்,’ என்றதிலே
நோக்காக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. சாந். உபநிட. 3 :
14.
3. தைரியபங்கம் பிறத்தல்
- காம்பீர்யத்திற்குறைதல்.
தலைச்சாவி வெட்டுகையாவது,
எழுச்சிஅறுக்கை; அதாவது, பயிர் மிடுக்காய்
வளர்ந்தவாறே, மதர்த்துப் போகாமைக்கு அதன் வளர்த்தியைக்
கொய்வது. அப்படியே
செருக்குக்குப் போக்கு விட்டு ஆடினபடி.
|