New Page 1
|
ஏழாந்திருவாய்மொழி - பா. 4 |
185 |
தேவும் என்றது,
இறைமைத் தன்மையினை. தன்னை என்கிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருக்கும் தன்மையை; அது
அன்றோ 1தானான தன்மை? ‘ஆத்மாநம் நாதி வர்த்தேதா: - நீரான தன்மையை இழவாதே
கொள்ளும்’ என்றார் வசிஷ்ட பகவானும். இச்சுலோகத்திலுள்ள ‘ஆத்மாநம்’ என்பதனை ஸ்ரீ பரதாழ்வானுக்கு
அடைமொழியாக்கி, ‘ஆத்துமாவைப் போன்ற பரதனை இழவாதே கொள்ளும்’ என்று இதற்கு வேறு வகையாகப்
பொருள் கூறுவர் சிலர். ‘நீரான தன்மையாகிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவராய் இருத்தல்;
‘உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து, நீரான தன்மையை இழவாதே கொள்ளும் 2என்கிறான்’
என்று பொருள் அருளிச்செய்வர் பட்டர். பாடி ஆடத் திருத்தி - தரிசு கிடந்த நிலத்தைச் செய்காலாம்படி
திருத்துவாரைப் போன்று, நித்திய சூரிகள் யாத்திரையே யாத்திரையாம்படி திருத்தி. ‘ஆயின், மேல்
அடியில், ‘என்று என்றே குனித்து’ என்றதற்கும், இங்குப் ‘பாடி ஆடி’ என்பதற்கும் வேற்றுமை என்?’
என்னில், மேலிடம், 3சௌலப்யத்திலே நோக்கு; இங்கு, இறைமை, சௌலப்யம்
_____________________________________________________________
1. தானான தன்மை -
தன்னுடைய சுவபாவம்; அதாவது, இறைவனுக்கு இயற்கைத்
தன்மையாவது, அடியார்கட்குப் பரதந்திரனாய்
இருத்தல் என்பதாம். ‘அப்படி ஆஸ்ரித
பாரதந்தர்யமே தானான தன்மையாக இருக்குமோ?’ எனின்,
அதற்கு, ‘ஆத்மாநம்
நாதிவர்த்தேதா:’ என்னும் ஸ்ரீராமாயணச் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்.
பாசுரத்திலுள்ள தன்னை’ என்பதும், சுலோகத்திலுள்ள ‘ஆத்மாநம்’ என்பதும் ஒரு
பொருளன; அந்தச்
சுலோகம், ஸ்ரீ ராம பிரானைப் பார்த்து வசிஷ்ட பகவான் கூறுவது.
அந்தச் சுலோகம்,
“பரதஸ்ய வச:குர்வந்
யாசமாநஸ்ய ராகவ
ஆத்மாநம் நாதிவர்ற்தேதாஸ்
ஸத்ய தர்ம பராக்ரம”
என்பது. ‘சத்தியம் தர்மம்
பராக்கிரமம் இவற்றையுடைய இராகவனே! யாசிக்கின்ற
பரதனுடைய வார்த்தையை மறுத்து நீரான தன்மையை
(ஆஸ்ரித பாரதந்தர்யத்தை)
இழவாதே கொள்ளும்’ என்கிறான் என்பதாம்.
2. ‘என்கிறான்’ என்ற பயனிலைக்கு வசிஷ்டபகவான் என்னும் எழுவாயினை வருவித்து
முடிக்க.
3. ‘சௌலப்யத்திலே
நோக்கு’ என்றது, ‘கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன்’ என
வருகின்றவற்றை நோக்கி. ‘இங்கு,
இறைமை சௌலப்யம் இரண்டிலும் நோக்கு’ என்றது,
‘தேவும் தன்னையும்’ என்றதனை நோக்கி. தேவு என்றதில்
இறைமைத்தன்மை; தன்னை
என்றதில் சௌலப்யத் தன்மை, சௌலப்யத்தை, அநுசந்தித்த காரணத்தால்
வந்த
கூத்தைச் சொல்லுகிறது; இறைமைத்தன்மையினையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்த
காரணத்தால்
வந்த பாடுதல் ஆடுதல்களைச் சொல்லுகிறது என்றபடி.
|