என
186 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
என்னும் இரண்டிலும் நோக்கு.
விஷய பேதத்தாலே சொல்லவுமாம். அன்றியே, ‘என்றுஎன்று’ என்ற இடம், மனத்தோடு படாத வார்த்தையாய்,
குனிக்கையாவது, முயற்சி அளவாய், இங்கு, மனத்தோடு பட்டுப் பாடுவது ஆடுவதானபடியாய், என்று என்றே
குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி என்றதாதல்.
என்னைக் கொண்டு
- என்னைக் கைக்கொண்டு; கைக்கொள்ளுதலாவது, ‘சேற்றிலே விழுந்த மாணிக்கத்தை எடுத்துக் கழுவி
விநியோகம் கொள்ளுமாறு போன்று, என்னை அங்கீகரித்து’ என்றபடி. என் பாவந்தன்னையும் பாறக்கைத்து
- என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத என் பாவங்களையும் உரு மாய்ந்து போம்படி ஓட்டி. ‘என்னைக்
கொண்டு’ என்பதற்கு, ‘ஓர் உபாய அநுஷ்டானத்தைச் செய்வித்து’ என்று கூறில், இப்போது இவர்க்கு1 அபசித்தாந்தமாம்; பகவானுடைய
திருவருளாலே பெற்றாராகச் சொல்லுமதுக்கும் சேராது; ஆதலின், மேலதே பொருள் எமர்ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் - இதுதான் என் ஒருவனளவு அன்றிக்கே, என்னோடு சம்பந்தமுடையார்
ஏழ் ஏழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே தன்மையாக உடையோமாம்படி செய்தருளினான். எம்பிரான்
விட்டு வல்லன் - எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் நினைத்த காரியம் செய்து தலைக்காட்ட வல்லன்.
சர்வசத்தி மாட்டாதது உண்டோ? 3வியாப்தியும் தமக்காக என்று இருக்கின்றார்.
181
விட்டிலங்கு செஞ்சோதித்
தாமரைபாதம் கைகள்கண்கள்;
விட்டுஇலங்கு
கருஞ்சுடர் மலையே திருஉடம்பு;
விட்டுஇலங்கு மதியம்சீர்
சங்கு; சக்க ரம்பரிதி;
விட்டுஇலங்கு முடிஅம்மான்
மதுசூத னன்தனக்கே.
பொ-ரை :
‘மலர்ந்து விளங்குகிற முடியினையுடைய சுவாமியான மதுசூதனனுக்குத்
திருவடிகளும் திருக்கைகளும் திருக்கண்களும்
____________________________________________________________
1. அபசித்தாந்தம் -
போலிக்கொள்கை; அவர்தம் கொள்கைக்கு முரண்பட்டது.
2. ‘வல்லன்’ என்பதற்கு
பாவம், ‘சர்வசத்தி மாட்டாததுண்டோ?’ என்ற வாக்கியம்.
3. ‘விட்டு’ என்பதற்கு மேலே
சர்வேஸ்வரன் என்று பொருள் அருளிச்செய்தார். இங்கு,
‘வியாப்தனானான்’ என்று வேறு பொருள்
அருளிச்செய்கிறார், ‘வியாப்தியும் தமக்காக
என்றிருக்கிறார்’ என்று. வியாப்தி - பரந்திருத்தல்.
|