முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

182

ஏழாந்திருவாய்மொழி - பா. 6

189

182

        மதுசூ தனைஅன்றி மற்றுஇலேன்என்று
            எத்தாலும் கருமம் இன்றித்
        துதிசூழ்ந்த பாடல்கள் பாடி ஆடநின்று
            ஊழிஊழி தொறும்
        எதிர்சூழல் புக்கு,எனைத் தோர்பிறப்பும்
            எனக்கே அருள்கள் செய்ய
        விதிசூழ்ந்த தால்எனக்கேல் அம்மான்
            திரிவிக் கிரமனையே.

    பொ - ரை : ‘மதுசூதனனாகிய இறைவனை ஒழிய வேறு ஒருவரையும் யான் தஞ்சமாக உடையேன் அல்லேன்,’ என்று உறுதி பூண்டு, வேறொரு பொருளாலும் ஒரு பயனும் இன்றிக் கல்பந்தோறும் கல்பந்தோறும் துதி செய்தலாக அமைந்து சூழ்ந்துள்ள பாடல்களைப் பாடி ஆடி அதிலேயே நிலைபெற்று நிற்கும்படி, நான் பிறந்த எல்லாப் பிறப்புகளிலும் தானும் எதிரே வந்து பிறந்து எனக்கே காரியங்களைச் செய்யும்படி அம்மானாகிய திரிவிக்கிரமனை என்பொருட்டாகவே ஓர் அருள் சூழ்ந்து கொண்டது,’ என்றவாறு.

    வி-கு : ‘மதுசூதனை அன்றி மற்றிலேன்’ என்று எத்தாலும் கருமம் இன்றி ஊழிஊழிதொறும் துதி சூழ்ந்த பாடல்களைப் பாடியாடி நின்று எனைத்தோர் பிறப்பும் எதிர்சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய, அம்மான் திரிவிக்கிரமனை என்பொருட்டாகவே ஒரு விதி சூழ்ந்தது’ எனக் கூட்டுக. ‘மற்று இலேன் என்று துதி சூழ்ந்த பாடல்கள்’ என்றும், ‘கருமம் இன்றித் துதிசூழ்ந்த பாடல்கள்’ என்றும், ‘எதிர் சூழல் புக்கு அருள்கள் செய்ய விதி சூழ்ந்தது’ என்றும் முடிக்க. ‘ஆட நின்று’ என்பதனை ‘நின்று ஆட’ என மாற்றுக. எனக்கே - ஏகாரம் பிரிநிலை. எனக்கேல், ‘ஏல்’அசைநிலை.

    ஈடு : 1ஆறாம் பாட்டு. ‘தன் பக்கல் யான் பத்தியுடையேன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திய வருத்தம் அனைத்தும் தன் கிருபையாலே’ என்கிறார்.

    மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று - விரோதிகளை அழிக்கும் தன்மையனானவனை ஒழிய, வேறு சிலரைத் தஞ்சமாக உடையேனல்லேன் என்றாயிற்று இவர் இருப்பது. ‘ஆயின், சத்துவம் தலையெடுத்த போது ஒருகால இவ்வார்த்தை சொல்லுமது

_____________________________________________________________

1. ‘எனைத்தோர் பிறப்பும் எதிர்சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்’
  என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை.