முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

முதல் திருவாய்மொழி - பா. 6

19

    ‘இப்படி, குறை அற்று இருக்கக்கடவ நீ, இக்காலத்தில் வந்தவாறே போக்கமாட்டுகின்றிலை’ என்பாள், ‘நாள் மதியே, நீ இந்நாள் அகன்றாய்’ என்கிறாள். ‘எதிரி எளியன் ஆனால் பகைவர்கள் கூட நின்று உருமுமாறு போன்று, மேலிடாநின்றது,’ என்றவாறு. இதனால், ‘இருளை ஒழிக்கவேண்டிய உன்னோடு அவ்விருளும் உடன் உள்ளததே!’ என்கிறாள். மாழாந்து தேம்புதி - ஒளி மழுங்கிக் குறைந்திராநின்றாய். ஐ வாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார் மெய்வாசகம் கேட்டு - இதனால் ‘அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாய் ஆகாதே நீ’ என்கிறாள். 1‘தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று’ என்கிறபடியே, தமக்குப் பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில், தம்மைச் சேர்ந்த படைக்கு ஐந்து வாய் உண்டு என்பாள், ‘ஐ வாய் அரவணை’ என்கிறாள். இதனால், அவனுக்குப் 2பள்ளித்தோழமை பலித்தமை தெரிவித்தபடி, இனி, மற்றைப் படைகளைப் பார்ப்போமாயின், அவர்களுடைய தன்மைகள் தாம் என்னே! தாம் பகலை இரவாக்க நினைக்கின், அதற்குப் பெருநிலை நிற்கும் சக்கரம் என்பாள், ‘ஆழிப் பெருமான்’ என்கிறாள்.

    ‘ஆயின், 3புருஷகாரமாய் இருக்கும் படைகளை வெறுத்துப் பேசலாமோ?’ எனின், பேறு அவர்களாலேயானால், இழவிலும் இன்னாதாகப் பேசுதற்கு இடமுண்டு. அத்தகைய அவர்களும் தம் பக்கலிலே பொய் ஓத வேண்டும்படி பொய்யால் பெரியவர் என்பாள், ‘பெருமானார்’ என்கிறாள். 4‘பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை’ என்றார் மங்கை மன்னனும். ‘ஆயின், பாசுரத்தில் ‘மெய்வாசகம்’ என்று இருக்க, பொய்வாசகம் என்று பொருள் கூறுவது என்னை?’ எனின், 5ஆழிப்பெருமானார் மெய் வாசகம்’ எனவே, ‘பொய்’ என்று பிரசித்தமாய் இருக்கும் போலேகாணும். ‘ஆயின்,’பொய்’ என்னாது ஒழிவான் என்?’ என்னில், ‘பொய்’ என்னில், நாட்டார் பொய்யைப் போன்று ஆகுமே? அதனினின்றும் வேறுபடுத்துதற்கு ‘மெய்வாசகம்’ என்கிறாள். ‘அம்மெய்வாசகம் யாது?’ எனின், 6என்னை அடைந்தவர்களை எல்லாத் துன்பத்தி

_____________________________________________________________

1. நாய்ச்சியார் திருமொழி, 10 : 3.

2. பள்ளி - சிலேடை: பள்ளிக்கூடமும் படுக்கையும்

3. திருவாய்மொழி முதற்பத்து வியாக்கியானம் 150-ஆம் பக்கம் ஈண்டு ஒப்பு நோக்குக.
  ‘அருளாத திருமாலார்க்கு’

4. பெரிய திருமொழி, 10, 7 : 4.

5. ஆழிப்பெருமானார் - கண்ணபிரான்.

6. ஸ்ரீராமா. யுத். 18 : 33.